RRR: எஸ்.எஸ்.ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம்!

ஆர்.ஆர்.ஆர் திரைப்படம்

இரண்டாம் அலை மீண்டும் குறுக்கிட, அக்டோபரிலும் படம் வெளியாகும் வாய்ப்பு இல்லை.

  • Share this:
    கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் குறையத் தொடங்கியதால் படிப்படியாக சகஜநிலை திரும்புகிறது. லாக்டவுனால் நின்றுபோன படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ள நிலையில், ராஜமௌலி தனது ஆர்ஆர்ஆர் படப்பிடிப்பை எப்போது தொடங்குவார் என்பதற்கு பதில் கிடைத்துள்ளது.

    பாகுபலிக்குப் பிறகு மிகப்பிரமாண்டமாக ஆர்ஆர்ஆர் படத்தை ராஜமௌலி இயக்கி வருகிறார். ராம் சரண், ஜுனியர் என்டிஆர் நடிக்கும் இந்தப் படத்தில் அலியா பட், அஜய் தேவ்கான், சமுத்திரக்கனி போன்றவர்களும் நடிக்கின்றனர். இரு சுதந்திரப் போராட்ட வீரர்களின் கதையை கற்பனை சேர்த்து விஜயேந்திர பிரசாத் எழுதியிருக்கும் கதைதான் ஆர்ஆர்ஆர் என்ற பெயரில் படமாகிறது.

    இந்த வருட ஆரம்பத்தில் வெளியாகியிருக்க வேண்டிய படம் கொரோனா முதல்அலையால் படப்பிடிப்பு தடைப்பட்டு, இந்த வருடம் அக்டோபாரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இரண்டாம் அலை மீண்டும் குறுக்கிட, அக்டோபரிலும் படம் வெளியாகும் வாய்ப்பு இல்லை. இந்நிலையில், ஜுலை 1 ஆம் தேதி மீண்டும் படப்பிடிப்பை தொடங்குவது என முடிவு செய்திருக்கிறார்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஆர்ஆர்ஆர் படத்தின் முக்கிய காட்சிகள் அனைத்தும் எடுக்கப்பட்டு விட்டதாகவும், இரு பாடல்காட்சிகள் மட்டுமே எடுக்கப்பட வேண்டும் எனவும் தகவல்கள் கூறுகின்றன. இதில் ஒரு பாடல் காட்சியை இதுவரை இந்திய சினிமா பார்த்திராதவகையில் பிரமாண்டமாக எடுக்க திட்டமிட்டுள்ளனர். இந்த பாடலின் படப்பிடிப்புக்காக மட்டும் 30 நாள்களை ஒதுக்கியுள்ளாராம் ராஜமௌலி.

    2022 ஜனவரி ஆர்ஆர்ஆர் திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: