ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

BAFTA நாமினேஷனில் இடம்பெறாத எஸ்.எஸ்.ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர்

BAFTA நாமினேஷனில் இடம்பெறாத எஸ்.எஸ்.ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர்

RRR படக்குழுவினர்

RRR படக்குழுவினர்

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் நடித்த நாட்டு நாட்டு பாடல் 2023 கோல்டன் குளோப்ஸ் விருதை வென்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கோல்டன் குளோப் விருதை வென்ற ஆர்ஆர்ஆர், BAFTA விருது பட்டியலில் இடம்பெறவில்லை.

ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் நடித்த எஸ்.எஸ்.ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படம் நாளுக்கு நாள் சாதனை படைத்து வருகிறது. கோல்டன் குளோப்ஸ் 2023-ல் வெற்றி பெற்ற இப்படம், BAFTA 2023 பரிந்துரைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. ஜனவரி 19-ம் தேதியான இன்று நாமினேஷன்கள் அறிவிக்கப்பட்டன. அதில் ஆர்ஆர்ஆர் இடம்பெறவில்லை.

எஸ்.எஸ்.ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் நடித்த நாட்டு நாட்டு பாடல் 2023 கோல்டன் குளோப்ஸ் விருதை வென்றது. BAFTA 2023-ல் 'ஆங்கில மொழி அல்லாத திரைப்படம்' பிரிவின் கீழ் எஸ்.எஸ்.ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படம் இடம்பெற்றது. இருப்பினும், படம் இறுதி பரிந்துரையில் இடம் பெறவில்லை. ஆல் சைட் ஆன் த வெஸ்டர்ன் ஃப்ரண்ட், அர்ஜென்டினா, 1985, கோர்சேஜ், டெசிஷன் டு லீவ் மற்றும் தி கொயட் கேர்ள் ஆகியப் படங்கள் இதன் இறுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

ரஜினிகாந்த்? சூர்யா? ஜெய் பீம் இயக்குநரின் அடுத்தப் படத்தில் யார் ஹீரோ?

BAFTA-வை தொடர்ந்து, அகாடமி விருதுகள் 2023 மார்ச் 12 அன்று நடைபெறுகிறது. விஜயேந்திர பிரசாத் எழுதி எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய ஒரு கற்பனை கதை தான் ஆர்ஆர்ஆர். இப்படத்தில் ராம் சரண், அல்லூரி சீதாராம ராஜுவாகவும் ஜூனியர் என்டிஆர், கொமரம் பீமாகவும் நடித்திருந்தனர். 1920 கால கட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம், இரண்டு தெலுங்கு சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. இதில் அஜய் தேவ்கன், ஆலியா பட், ஷ்ரேயா சரண், ரே ஸ்டீவன்சன், அலிசன் டூடி மற்றும் ஒலிவியா மோரிஸ் ஆகியோர் துணை வேடங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Rajamouli, Ram Charan