ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படம் வரும் 25-ஆம் தேதி திரைக்கு வருகிறது. பாகுபலி 2 படத்தின் முதல் நாள் வசூல் உள்பட அனைத்து வசூல் சாதனைகளையும் ஆர்ஆர்ஆர் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ராஜமௌலியின் அடுத்தப் படத்தின் ஹீரோ குறித்து எழுந்த குழப்பத்துக்கு ராஜமௌலி விளக்கம் அளித்துள்ளார்.
ராஜமௌலி ஆரம்பத்தில் முன்னணி நட்சத்திரங்களை வைத்தே படங்கள் இயக்கினார். நடிகர்களால் தான் ராஜமௌலியின் படங்கள் வெற்றி பெறுகின்றன என்ற பேச்சு வந்தபோது, முன்னணி நடிகர்களை தவிர்த்து நகைச்சுவை நடிகர் சுனிலை நாயகனாக்கி மரியாத ராமண்ணா படத்தை எடுத்தார். படம் ஹிட். பாகுபலி இரு பாகங்களும் கூட ராஜமௌலியால் ஓடியதே தவிர பிரபாஸால் அல்ல.
முன்னணி நட்சத்திரங்கள் இல்லாமலும் படத்தை வெற்றி பெறச் செய்ய முடியும் என்பதை நிரூபித்த பிறகு ஆர்ஆர்ஆர் படத்தில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண் என ஒன்றுக்கு இரண்டு முன்னணி நட்சத்திரங்களை நடிக்க வைத்தார். இதையடுத்து அவர் மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்குகிறார். இதனை அவர் ஏற்கனவே கூறியிருந்தார்.
இசைஞானி இளையராஜா பாணியை பின்பற்றும் அனிருத்!
ஆனால் திடீரென, மகேஷ்பாபுவின் படம் தள்ளிப்போவதாகவும், அல்லு அர்ஜுனை வைத்து ராஜமௌலி அடுத்தப் படத்தை இயக்குவதாகவும் சிலர் செய்தி வெளியிட்டனர். இது மகேஷ்பாபுவின் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. ஆனால், இது வெறும் வதந்தி என்பதை ராஜமௌலி விளக்கியுள்ளார்.
சாதனை விலைக்கு விற்கப்பட்ட விஜய்யின் பீஸ்ட் வெளிநாட்டு உரிமை!
ஆர்ஆர்ஆர் படத்தின் புரமோஷனுக்காக கர்நாடகா சென்ற அவர் அங்கு அளித்த பேட்டியில், அடுத்து மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்குவதை உறுதி செய்தார். அத்துடன் ஆர்ஆர்ஆர் போன்று அது பல ஹீரோக்கள் நடிக்கும் படமாக இருக்காது, மகேஷ்பாபு மட்டும் நடிக்கும் படமாக இருக்கும் எனவும் தெளிவுப்படுத்தியுள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.