Home /News /entertainment /

ராஜமெளலியின் பாகுபலி படத்தில் பல ஹாலிவுட் படங்களின் காட்சிகள் - வைரலாகும் வீடியோ

ராஜமெளலியின் பாகுபலி படத்தில் பல ஹாலிவுட் படங்களின் காட்சிகள் - வைரலாகும் வீடியோ

பாகுபலி

பாகுபலி

பாகுபலி படத்தில் பல ஹாலிவுட் படங்களின் காட்சிகள் காப்பியடிக்கப்பட்டிருப்பதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பாகுபலி படத்தில் பல ஹாலிவுட் படங்களின் காட்சிகள் அப்படியே காப்பியடிக்கப்பட்டிருப்பதாக ட்விட்டரில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

    தெலுங்கு சினிமாவின் பிரமாண்ட இயக்குநராகக் கருதப்படுபவர் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி. படத்தொகுப்பாளராக இருந்து இயக்குநரான இவர் 20 ஆண்டுகளுக்குள், தெலுங்கு சினிமாவை உலக அரங்குக்கு கொண்டு சென்றவர். பாகுபலி திரைப்படத்துக்கு முன்பாக மகதீரா திரைப்படம் மூலம் பெரும் ரசிகர்களை பெற்றிருந்தார் ராஜமெளலி. அவரது தந்தை விஜயேந்திர பிரசாத் எழுதிய கதையிலிருந்து உருவான அந்தப் படத்துக்காக (மாவீரன்) 15 ஆண்டுகள் தான் காத்திருந்ததாக தெரிவித்திருந்தார். இந்த படத்தில் நாயகனாக நடித்த ராம் சரண் மற்றும் நாயகியாக நடித்த காஜல் அகர்வால் இருவரும் அதன் பின்னர் தான் புகழ் வெளிச்சத்தை அடைந்தனர்.

    குறிப்பாக ராஜமெளலி இயக்கிய பாகுபலி திரைப்படம் இந்தியாவை கடந்து உலகெங்கும் உள்ள சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. படத்தின் பிரமாண்டத்தைப் பார்த்த ரசிகர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தனர். இந்நிலையில் தற்போது பாகுபலி படத்தில் பல ஹாலிவுட் படங்களின் காட்சிகள் காப்பியடிக்கப்பட்டிருப்பதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

    விவாகரத்து, சக நடிகருடன் நெருக்கம், தயாரிப்பாளருடன் இரண்டாவது திருமணம் - சீரியல் நடிகை மகாலட்சுமி ஆல்பம்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அவதார், 300, தி மித், கிங்காங், அவெஞ்சர்ஸ், ஹெர்குலெஸ், பேட்மேன், வால்வொரின், காட் ஆஃப் வார் 3 கேம் பிளே உள்ளிட்ட பல படங்களின் முக்கியக் காட்சிகள் பாகுபலியில் இடம்பெற்றிருப்பதாக, இரண்டையும் ஒப்பிட்டுள்ள வீடியோ ஒன்று ட்விட்டரில் கவனம் ஈர்த்து வருகிறது.



    அதைப் பார்த்ததும், ஒரே படத்தில் இத்தனை படங்களின் காப்பியா என அதிர்ச்சியில் இருக்கிறார்கள் நெட்டிசன்கள்.
    Published by:Shalini C
    First published:

    Tags: Rajamouli

    அடுத்த செய்தி