Sruti Nakkhul: ’என் குழந்தைக்கு இது வேணாம்...’ ரசிகரின் செயலால் கோபமான ஸ்ருதி நகுல்

குடும்பத்துடன் நகுல்

ஒரு மைனர் குழந்தைக்கு இப்படியான தனி பக்கங்களை தொடர்வது தேவையில்லாதது. அது சட்டவிரோதமானது.

  • Share this:
    தன் குழந்தை பெயரில் தொடங்கியிருக்கும் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ரிப்போர்ட் செய்யுமாறு நடிகர் நகுலின் மனைவி ஸ்ருதி கேட்டுக் கொண்டுள்ளார்.

    இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பாய்ஸ் திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் நகுல். அதன்பிறகு தனது உடல் எடையைக் குறைத்து, புதுவித தோற்றத்தில் காதலில் விழுந்தேன், மாசிலாமணி, வல்லினம் போன்ற படங்களில் நடித்தார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ’பிக் பாஸ் ஜோடிகள்’ நிகழ்ச்சியில் ரம்யா கிருஷ்ணனுடன் இணைந்து நடுவராக உள்ளார்.

    நகுலின் மனைவி ஸ்ருதி. இவர்களுக்கு அகிரா என்ற மகளும் இருக்கிறார். இவர்களை ஏராளமான ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பின் தொடர்கிறார்கள். ஸ்ருதி அவ்வப்போது சமூகவலைதளங்களில் ரசிகர்களுடன் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். இந்நிலையில் ரசிகர் ஒருவர் இவர்களுடைய மகள் அகிராவுக்கு தனி இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடங்கி அதில் அகிராவின் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் நிகழ்வுகளை பதிவேற்றம் செய்து வருவதை பார்த்து கோபமாகி இருக்கிறார் ஸ்ருதி.



     




    View this post on Instagram





     

    A post shared by Sruti Nakul (@srubee)






    இது குறித்து இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டிருந்த ஸ்ருதி, “ரசிகர்கள் எங்கள் மீது வைத்திருக்கும் அன்பும் அக்கறையும் பாசமும் புரிகிறது. ஆனாலும் ஒரு மைனர் குழந்தைக்கு இப்படியான தனி பக்கங்களை தொடர்வது தேவையில்லாதது. அது சட்டவிரோதமானது. குறிப்பாக பெற்றோர்களாகிய நாங்கள் அதை விரும்பவில்லை. நாங்களே அகிராவுக்கான சமூகவலைதள பக்கத்தை தொடங்கவில்லை எனும்போது ரசிகர் ஒருவர் இப்படி தொடங்குவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லாத ஒரு விஷயமாக இருக்கிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.



     




    View this post on Instagram





     

    A post shared by Sruti Nakul (@srubee)






    இது பற்றி சம்பந்தப்பட்டவருக்கு நான் இன்ஸ்டாகிராமில் மெசேஜ் செய்தேன். முதலில் அகிரா சம்பந்தப்பட்ட பதிவுகளை நீக்குவதாக அவர் தெரிவித்தார். ஆனால் தொடர்ந்து மெசேஜ் அனுப்பும் போது, எந்த ரெஸ்பான்ஸூம் அவரிடத்தில் இருந்து இல்லை. எனவே அனைவரும் அந்த குறிப்பிட்ட அந்த பக்கத்தை ரிப்போர்ட் செய்யுங்கள். இதுபோன்று வேறு பக்கங்களை பார்த்தாலும் அவற்றை ரிப்போர்ட் செய்யுங்கள்!” என்று கோபத்துடன் தெரிவித்திருக்கிறார்,

    பிரபலங்களுக்கு மட்டுமல்ல, அவர்களின் குழந்தைகளுக்கும் தற்போது ஃபேன் பேஜ் மற்றும் போலி சமூக வலைதள பக்கங்களை உருவாக்குவது வாடிக்கையாகி வருவது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: