நடிகை ஸ்ருதி ஹாசன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
முதிர்ச்சியான நடிப்பு மற்றும் செதுக்கப்பட்ட உடல்வாகிற்கு பெயர் போனவர் நடிகை ஸ்ருதி ஹாசன். நடிப்பு, இசை என தன்னை எப்போதும் பிஸியாக வைத்துக் கொள்கிறார். 36 வயதாகும் அவர் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கும் ஸ்ருதி ஹாசன், “அனைவருக்கும் வணக்கம்! எல்லா பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றியபோதும் எனக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதியானது. நான் இப்போது குணமடைந்து வருகிறேன். விரைவில் திரும்பி வருவேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தொழில் வாழ்க்கையைப் பொறுத்தவரை ஸ்ருதி கடைசியாக 'பெஸ்ட் செல்லர்' என்ற சைக்கலாஜிக்கல் த்ரில்லர் தொடரில் நடித்தார். பிரபாஸுடன் 'சலார்' திரைப்படத்திலும் நடித்துள்ளார். பிரசாந்த் நீல் இயக்கியுள்ள இப்படம் ஸ்ருதியின் முதல் கன்னட திரைப்படமாகும். அதோடு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவுடன் வேறொரு படத்திலும் நடிக்கிறார்.
View this post on Instagram
நான் திமிர் பிடித்தவள் தான்... விமர்சனங்களுக்கு வனிதா விஜயகுமார் பதிலடி
தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை ஸ்ருதி ஹாசன், சாந்தனு ஹசாரிகா என்ற டூடுல் ஆர்டிஸ்டை காதலித்து வருகிறார். அடிக்கடி வெளியிடங்களுக்கு செல்வது, கலைக் கண்காட்சிக்கு போவது என உறவை இன்னும் பலப்படுத்தி வருகிறார்கள் ஸ்ருதி சாந்தனு ஜோடி.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actress shruti Haasan