பிக்பாஸ் ரகசியத்தை வெளியிட்ட ஸ்ரீரெட்டி!

பிக்பாஸ் ரகசியத்தை வெளியிட்ட ஸ்ரீரெட்டி!
நடிகை ஸ்ரீரெட்டி
  • News18
  • Last Updated: May 1, 2019, 4:26 PM IST
  • Share this:
பிக்பாஸ் குறித்த ரகசியம் ஒன்றை கசியவிட்டுள்ளார் நடிகை ஸ்ரீரெட்டி.

தெலுங்கு சினிமாவில் படவாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருக்கிறது என்றும், பட வாய்ப்பு தருவதாக கூறி திரையுலகினர் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டனர் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்ரீரெட்டி. மேலும் இதற்காக அவர் அரைநிர்வாண போராட்டத்திலும் ஈடுபட்டார்.

தெலுங்கு சினிமா தவிர தமிழ் சினிமாவிலும் அத்தகைய போக்கு இருப்பதாக சர்ச்சையைக் கிளப்பிய அவர், இயக்குநர் முருகதாஸ், லாரன்ஸ், சுந்தர்.சி, நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் மீது பரபரப்பு புகார் கூறினார்.
பிரபலங்களின் மீது தனது ஃபேஸ்புக் பக்கத்தில் சர்ச்சைக் கருத்து பதிவிட்டு வரும் ஸ்ரீரெட்டி தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பதிவிட்டுள்ளார். இதுகுறித்த தனது ஃபேஸ்புக்பதிவில், தெலுங்கில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனை நடிகர் வெங்கடேஷ் தொகுத்து வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அனுஷ்கா - நடிகை
தெலுங்கு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியை நடிகை அனுஷ்கா தொகுத்து வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அவர் மட்டுமல்லாமல் நடிகர் வெங்கடேஷ், சிரஞ்சீவி, நாகர்ஜூனா, ஜுனியர் என்.டி.ஆர் ஆகியோரது பெயர்களும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் பட்டியலில் பேசப்பட்டன.அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில் நடிகை ஸ்ரீரெட்டி தனக்கு கிடைத்த ரகசிய தகவலை ஃபேஸ்புக் வாயிலாக தெரிவித்துள்ளார்.

தன்னம்பிக்கையின் நாயகன் ‘தல’ அஜித் - பிறந்தநாள் ஸ்பெஷல் வீடியோ

First published: May 1, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading