அஜித்தையும் விட்டுவைக்காத ஸ்ரீரெட்டி... ஆனா நீங்க நினைக்கிற மாதிரி இல்ல

தனது ஃபேஸ்புக் பதிவில் அஜித் புகைப்படத்தை பதிவிட்டு இந்த புகைப்படத்தை பார்க்காமல் நான் தூங்கமாட்டேன். தமிழகத்தின் நம்பர் 1 ஹீரோ. என் தலை உங்கள் காலில் தல” என்று நடிகை ஸ்ரீரெட்டி பதிவிட்டுள்ளார்.

அஜித்தையும் விட்டுவைக்காத ஸ்ரீரெட்டி... ஆனா நீங்க நினைக்கிற மாதிரி இல்ல
நடிகை ஸ்ரீரெட்டி| அஜித்
  • News18
  • Last Updated: March 20, 2019, 7:47 PM IST
  • Share this:
நடிகர் அஜித்தை புகழ்ந்து கருத்து பதிவிட்டுள்ளார் நடிகை ஸ்ரீரெட்டி.

தெலுங்கு சினிமாவில் படவாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருக்கிறது என்றும், பட வாய்ப்பு தருவதாக கூறி திரையுலகினர் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டனர் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்ரீரெட்டி. மேலும் இதற்காக அவர் அரைநிர்வாண போராட்டத்திலும் ஈடுபட்டார்.

தெலுங்கு சினிமா தவிர தமிழ் சினிமாவிலும் அத்தகைய போக்கு இருப்பதாக சர்ச்சையைக் கிளப்பிய அவர், இயக்குநர் முருகதாஸ், லாரன்ஸ், சுந்தர்.சி, நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் மீது பரபரப்பு புகார் கூறினார்.


பிரபலங்களின் மீது தனது ஃபேஸ்புக் பக்கத்தில் சர்ச்சைக் கருத்து பதிவிட்டு வரும் ஸ்ரீரெட்டி தற்போது நடிகர் அஜித்தை புகழ்ந்துள்ளார். இதுகுறித்த தனது ஃபேஸ்புக் பதிவில் அஜித் புகைப்படத்தை பதிவிட்டு இந்த புகைப்படத்தை பார்க்காமல் நான் தூங்கமாட்டேன். தமிழகத்தின் நம்பர் 1 ஹீரோ. மிகவும் கனிவாக பேசக்கூடியவர். குடும்பத்தை நேசிக்கும் மனிதர். அவரது ரசிகர்கள் மீது அன்பு கொண்டிருப்பவர். மனிதநேயமிக்கவர். சிறந்த தந்தை. சிறந்த கணவன். என்னையும் சேர்த்து கோடிக்கணக்கான பெண்களின் மனதை கொள்ளை கொண்டவர். என் தலை உங்கள் காலில் தல” என்று கூறியுள்ளார்.

சினிமா பிரபலங்களை திட்டியும், புகார் கூறியும் கருத்து பதிவிடும் நடிகை ஸ்ரீரெட்டி அஜித்தை புகழ்ந்து கருத்துபதிவிட்டுள்ளார். இதற்கு முன்னரும் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் அஜித் என்று ஸ்ரீரெட்டி கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Watch....

விஜய் 63 படப்பிடிப்பு வீடியோ லீக்கானது!

First published: March 20, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading