ஸ்ரீரெட்டி வீட்டில் நள்ளிரவில் தாக்குதல் - போலீசில் அதிரடி புகார்

நடிகை ஸ்ரீரெட்டி தற்போது ரெட்டி டைரி படத்தில் நடித்து வருகிறார்.

ஸ்ரீரெட்டி வீட்டில் நள்ளிரவில் தாக்குதல் - போலீசில் அதிரடி புகார்
நடிகை ஸ்ரீரெட்டி
  • News18
  • Last Updated: March 22, 2019, 1:43 PM IST
  • Share this:
வீட்டில் இருந்த தன்னை நள்ளிரவில் தாக்கியதாக நடிகை ஸ்ரீரெட்டி போலீசில் புகார் அளித்துள்ளார்.

தெலுங்கு சினிமாவில் படவாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருக்கிறது என்றும், பட வாய்ப்பு தருவதாக கூறி திரையுலகினர் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டனர் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்ரீரெட்டி. மேலும் இதற்காக அவர் அரைநிர்வாண போராட்டத்திலும் ஈடுபட்டார்.

தெலுங்கு சினிமா தவிர தமிழ் சினிமாவிலும் அத்தகைய போக்கு இருப்பதாக சர்ச்சையைக் கிளப்பிய அவர், இயக்குநர் முருகதாஸ், லாரன்ஸ், சுந்தர்.சி, நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் மீது பரபரப்பு புகார் கூறினார்.




தற்போது ரெட்டி டைரி என்ற படத்தில் நடித்து வரும் ஸ்ரீரெட்டியை அப்படத்தின் ஃபைனான்சியர் சுப்பிரமணி இரவு 11 மணிக்கு வீட்டுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதாக போலீசில் புகார் அளித்துள்ளார். இந்தத் தாக்குதலில் தனது வீட்டில் இருந்த கண்ணாடி சேதமானதுடன் தனது ஆடைகளை பிடித்து இழுத்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்ரீரெட்டி, “ரெட்டி டைரி படத்தின் தயாரிப்பாளருக்கும், ஃபைனான்சியர் சுப்பிரமணிக்கும் இடையே சமீபத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதற்கு நான் தான் காரணம் என்று சுப்பிரமணி என் மீது தாக்குதல் நடத்துகிறார். எனவே நான் போலீசில் புகார் அளித்துள்ளேன்’’ என்றார்.

ஏற்கனவே பைனான்சியர் சுப்பிரமணியத்தால் உடல் ரீதியான தாக்குதலுக்கு உள்ளாகி தெலுங்கானா தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளதாக தெரிவித்த அவர், தன்னுடைய ஆடி காரை சுப்பிரமணியம் அபகரிக்க முயல்வதோடு, தன்னையும் அடைய முயற்சி செய்வதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோயம்பேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நடிகை வடிவுக்கரசி வீட்டில் நகை திருட்டு! - வீடியோ

First published: March 22, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading