ஆதாரங்களை திரட்டும் ஸ்ரீரெட்டியின் அடுத்த மூவ்!

திரைத்துறையில் இருக்கும் முக்கிய புள்ளிகளின் காதல் விவரங்களை தெரிந்து கொண்டு தகவல்களை திரட்டி வருவதாக நடிகை ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.

news18
Updated: December 4, 2018, 4:12 PM IST
ஆதாரங்களை திரட்டும் ஸ்ரீரெட்டியின் அடுத்த மூவ்!
ஸ்ரீரெட்டி
news18
Updated: December 4, 2018, 4:12 PM IST
திரைத்துறையில் இருக்கும் முக்கியப் புள்ளிகளின் காதல் விவரங்களை தெரிந்து கொண்டு தகவல்களை திரட்டி வருவதாக நடிகை ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.

தெலுங்கு சினிமாவில் படவாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருக்கிறது என்றும், பட வாய்ப்பு தருவதாக கூறி திரையுலகினர் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டனர் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்ரீரெட்டி. மேலும் இதற்காக அவர் அரைநிர்வாண போராட்டத்திலும் ஈடுபட்டார்.

தெலுங்கு சினிமா தவிர தமிழ் சினிமாவிலும் அத்தகைய போக்கு இருப்பதாக சர்ச்சையைக் கிளப்பிய அவர், இயக்குநர் முருகதாஸ், லாரன்ஸ், சுந்தர்.சி, நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் மீது பரபரப்பு புகார் கூறினார். இதனிடையே அவருடைய வாழ்க்கை கதை `ரெட்டி டைரி' என்ற பெயரில் படமாகி வருகிறது. இந்தப் படத்தில் நடிகை ஸ்ரீரெட்டி தற்போது நடித்து வருகிறார்.

இதையடுத்து நடிகர் ராகவா லாரன்ஸ், அவரது அடுத்த படத்தில் நடிக்க ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பளித்து, அதற்கான அட்வான்ஸ் தொகையை கொடுத்ததாகவும் தனது பேஸ்புக் பக்கத்தில் ஸ்ரீரெட்டி கூறியிருந்தார்.அவ்வப்போது தனது ஃபேஸ்புக் பக்கத்தில் புகார் கூறிவரும் அவர், தகவல்களை வெளியிடுவதில் சிரி(ஆப்பிள் போனின் ஆப்) எவ்வளவு பிரபலமானது என்று அனைவருக்கும் தெரியும். அதில் திரைத்துறையில் இருக்கும் முக்கியப் பிரபலங்களின் காதல் விவகாரங்களை எல்லாம் தெரிந்துகொண்டு, பல பெண்களிடம் தொடர்ந்து தகவல்களையும் திரட்டி வருகிறேன். இந்தத் தகவல் திரைத்துறையை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள பெரிய உதவியாக இருக்கும். இதனால் திரைத்துறையில் பாதிக்கப்படும் பெண்களை காப்பாற்ற முடியும்” என்று கூறியுள்ளார்.

திருந்தி வாழ்ந்த ரவுடி அடித்து கொலை..பின்னணி என்ன - வீடியோ
Loading...
First published: December 4, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...