Home /News /entertainment /

வெற்றிமாறன் இயக்கத்தில் கமல் - உறுதி செய்த ஸ்ரீப்ரியா!

வெற்றிமாறன் இயக்கத்தில் கமல் - உறுதி செய்த ஸ்ரீப்ரியா!

வெற்றிமாறன் - கமல் ஹாசன்

வெற்றிமாறன் - கமல் ஹாசன்

கமல் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கிறார் என்று ஒரு தகவல் கொஞ்ச நாட்களாக உலவுகிறது.

    வெற்றிமாறன் இயக்கத்தில் கமல் நடிக்கிறார் என்று ஒரு தகவல் முன்பே உலவி வந்தது. அதனை உறுதி செய்துள்ளார் நடிகையும் கமலின் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகியுமான ஸ்ரீப்ரியா.

    தீவிர அரசியலில் இறங்கியதால் இனி சினிமாவில் நடிப்பதில்லை என்று தேர்தல் நேரத்தில் கமல் அறிவித்தார். தேர்தல் ஜுரம் அடங்கியதும் ஆவேசமும் அடங்கியது. இந்தியன் 2, விக்ரம், பிக்பாஸ் என சினிமா, தொலைக்காட்சி இரண்டிலும் பிஸியானார் கமல். இப்போது உள்ளாட்சி தேர்தலையொட்டி பார்ட் டைமாக அரசியல் பழகுகிறார். ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம். மீண்டும் சினிமாவுக்கு திரும்புவார்.

    கமல் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கிறார் என்று ஒரு தகவல் கொஞ்ச நாட்களாக உலவுகிறது. ஆனால், இதுவரை யாரும் இதனை உறுதி செய்யவில்லை. இந்நிலையில் நடிகை ஸ்ரீப்ரியாவிடம் பாபநாசம் 2 பற்றி கேட்கப்பட்டது. கமல் குறித்து ஸ்ரீப்ரியாவிடம் ஏன் கேட்கிறார்கள் என்று ஐயம் எழலாம். ஸ்ரீப்ரியா கமலின் சக நடிகை. கமல் வாக்களித்திருக்கும் நவீன தமிழகத்தை வடிவமைக்கப் போகும் சிற்பிகளில் ஒருவர். மக்கள் நீதி மய்யத்தின் அதிகாரமிக்க நிர்வாகி.

    பாபநாசம் 2 கேள்விக்குப் பதிலளித்த ஸ்ரீப்ரியா, கமலால் மட்டுமே பாபநாசம் 2 படத்தில் நடிக்க முடியும். ஆனால் அவருக்கு நேரமில்லை. ஏற்கனவே உள்ளாட்சி தேர்தல், பிக் பாஸ் 5 என பிஸியாக இருக்கிறார். தவிர விக்ரம், வெற்றிமாறன் படம் என இரண்டு படங்களும் இருக்கின்றன என்றார். இதன் மூலம் வெற்றிமாறன் இயக்கத்தில் கமல் நடிப்பது உறுதியாகியுள்ளது. இந்தப் படத்தை மதுரை அன்புச்செழியனின் கோபுரம் ஃபிலிம்ஸ் அனேகமாக தயாரிக்கலாம் என்கின்றன செய்திகள்.

    மலையாள த்ரிஷ்யத்தின் தமிழ் ரீமேக்கே பாபநாசம். த்ரிஷ்யத்தை தெலுங்கில் ரீமேக் செய்தவர் ஸ்ரீப்ரியா என்பது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Director vetrimaran

    அடுத்த செய்தி