ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வாரிசு VS துணிவு : உண்மையான முடிவை யாராலும் மறைக்க முடியாது - வாரிசு நடிகர் அதிரடி

வாரிசு VS துணிவு : உண்மையான முடிவை யாராலும் மறைக்க முடியாது - வாரிசு நடிகர் அதிரடி

விஜய் - அஜித்

விஜய் - அஜித்

வாரிசா - துணிவா என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் காரசாரமாக மோதிக்கொள்ளும் நிலையில் பிரபலங்கள் பலரும் இதற்கு எதிராக கருத்து தெரிவித்துவருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

விஜய்யின் வாரிசு படமும் அஜித்தின் துணிவு படமும் கடந்த 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. துவக்கத்திலிருந்தே எந்தப் படம் பொங்கல் வின்னர் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே காணப்பட்டது. அதற்கேற்ப வாரிசு படத்தின் வசூல் இவ்வளவு, துணிவு படத்தின் வசூல் இவ்வளவு என ரசிகர்கள் மோதிக்கொண்டிருக்க, வாரிசு படம் ரூ.210 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதனை தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் கடுமையாக எதிர்த்தார். துணிவு படத்தின் வசூல் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிக்கப்படவில்லை. வாரிசா - துணிவா என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் காரசாரமாக மோதிக்கொள்ளும் நிலையில் பிரபலங்கள் பலரும் இதற்கு எதிராக கருத்து தெரிவித்துவருகின்றனர்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் விஷ்ணு விஷால், ''உடனடியாக இதை நிறுத்துங்கள். படங்களை படமாக பாருங்கள். உங்களுடைய ஹீரோக்களை திரையில் கொண்டாடுங்கள்'' என காட்டமாக குறிப்பிட்டிருந்தார்.

இதன் ஒரு பகுதியாக நடிகர் ஸ்ரீமன் தனது ட்விட்டர் பக்கத்தில், ''அது எந்த படமாக இருக்கட்டும் மதிப்பாய்வு செய்வது மிகவும் எளிதானது, ஆனால் உண்மையான முடிவை யாராலும் மறைக்க முடியாது. படம் பிடித்தால் கூட்டம் வரும், மீண்டும் வரும், வந்து கொண்டே இருக்கும், அது கடின உழைப்பின் பலன், தொடர்ந்து கருத்து கூறுங்கள், அது உங்கள் சேவை, உங்கள் வேலை. உங்களுக்கு தேவை'' என்று குறிப்பிட்டுள்ளார்.

வாரிசு படத்தில் சிறிய வேடத்தில் நடித்துள்ள ஸ்ரீமன் விஜய்யுடன் இணைந்து லவ் டுடே, நிலாவே வா நெஞ்சினிலே, ஃபிரெண்ட்ஸ், வசீகரா, சுக்ரன், அழகிய தமிழ் மகன், வில்லு, சுரா, பைரவா போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

First published:

Tags: Thunivu, Varisu