Home /News /entertainment /

RRR: ராம் சரண், ஜூனியர் என்டிஆர் ரசிகர்களுக்கு பயந்து முள்வேலி தடுப்பு அமைத்த தியேட்டர் நிர்வாகம்!

RRR: ராம் சரண், ஜூனியர் என்டிஆர் ரசிகர்களுக்கு பயந்து முள்வேலி தடுப்பு அமைத்த தியேட்டர் நிர்வாகம்!

ஆர் ஆர் ஆர் ரிலீஸ்

ஆர் ஆர் ஆர் ரிலீஸ்

பொதுவாக உச்ச நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகும் போது, அவர்களை சமாளிப்பதே திரையரங்கு நிர்வாகத்தினருக்கும் பெரும் சவால்.

    ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்களின் ஆர்ப்பாட்டங்களுக்கு பயந்து ஆர்ஆர்ஆர் படம் வெளியாகும் ஒரு திரையரங்கில், திரைக்கு முன்பு முள்வேலி போடப்பட்டுள்ளது.

    இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கி முடித்திருக்கும் திரைப்படம் 'ஆர் ஆர் ஆர்'. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை டிவிவி நிறுவனம் பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள இந்தப்படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ளது.

    தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவிருக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்களும், மேக்கிங் மற்றும் க்ளிம்ப்ஸ் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

    மஹதீரா, பாகுபலி, பாகுபலி 2 என பிரமாண்ட படங்களின் மூலம் ரசிகர்களின் பெரும் மதிப்பைப் பெற்ற ராஜமெளலி அந்தப் படங்களை எல்லாம் மிஞ்சும் வகையில் ஆர் ஆர் ஆர் படத்தை இயக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

    விஜய் டிவி டிடி-க்கு வளைகாப்பு?

    பொதுவாக உச்ச நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகும் போது, அவர்களை சமாளிப்பதே திரையரங்கு நிர்வாகத்தினருக்கும் பெரும் சவால். அதிலும் ராம் சரண், என் டி ஆர் என இருபெரும் நட்சத்திரங்களும் ஒரே படத்தில் இருந்தால், ரசிகர்களின் கொண்டாட்ட மனநிலைக்கு சொல்லவா வேண்டும். ஆகையால் படத்தை முதல் நாளில் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

    இந்நிலையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பகுதியில் உள்ள சூர்யா தியேட்டரில் ரசிகர்கள் தங்கள் இருக்கையை விட்டு திரைக்கு அருகில் செல்லாமல் தடுக்கும் விதமாக இரும்பு முள்வேலி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. முதல்நாளில் உச்ச நட்சத்திரங்களின் படங்களைப் பார்க்க திரையரங்கிற்கு படையெடுக்கும் ரசிகர்கள், ஆடி பாடி கொண்டாடுவது, திரைக்கு அருகில் சென்று அதனை சேதம் செய்வது என பல செயல்களில் ஈடுபடுவார்கள்.

    Shalini Ajith: 23 ஆண்டு பிணைப்பு... வைரலாகும் ஷாலினி அஜித் ரொமாண்டிக் படம்!



    அந்த மாதிரியான சேதத்தை தடுக்கும் பொருட்டு, தற்போது ராஜமெளலியின் ஆர் ஆர் ஆர் படம் வெளியாகும் சூர்யா தியேட்டரில் முள்வேலி தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Rajamouli, Ram Charan

    அடுத்த செய்தி