தமிழ் திரை உலகின் ஆரம்ப கால ஜாம்பவான்களில் ஸ்ரீதர் முக்கியமானவர். இவரது இயற்பெயர் ஸ்ரீதர கிருஷ்ணன். தந்தை விஜயராகவுலு ரெட்டியார், அம்மா தாயாரம்மாள். செங்கல்பட்டில் பிறந்த ஸ்ரீதர் பத்தாம் வகுப்பு வரை பயின்றார். 20 வயதிலேயே தமிழ் உரைநடையை கவித்துவத்துடன் எழுதும் தேர்ச்சி பெற்றார். நாடக போட்டிகளில் அந்த வயதிலேயே கலந்துகொண்டு பரிசுகள் பெற்றுள்ளார்.
ஏவிஎம் நிறுவனத்திற்காக தொடர்ச்சியாக படங்கள் இயங்கி வந்த ப நீலகண்டனிடம் தான் எழுதிய கதையை வாசிக்க தந்தார் ஶ்ரீதர். அதை படித்துவிட்டு பாராட்டியவர், சின்னப் பையனாக இருக்கிறாய் வளர்ந்த பிறகு பார்க்கலாம் என்று அனுப்பி வைக்க, அதே கதையை டி கே டி சகோதரர்கள் நடத்தி வந்த நாடக சபாவில் பணியாற்றி வந்த தி.க. சண்முகத்திடம் காட்டினார்.
கதை நன்றாக இருக்கவே சில திருத்தங்கள் செய்து அது நாடகமாக நடத்தப்பட்டது பிறகு 1954 ரத்த பாசம் என்ற பெயர்கள் திரைப்படமானது அதற்கு வசனம் எழுதி திரை துறையில் நுழைந்தார் ஸ்ரீதர். ஸ்ரீதர் தனது ஆரம்ப காலத்தில் மாமன் மகள், அமரதீபம், மாதர் குல மாணிக்கம், யார் பையன், எங்கள் வீட்டு மகாலட்சுமி, உத்தமபுத்திரன், மஞ்சள் மகிமை என பல படங்களுக்கு வசனம் எழுதினார்.
வசனகர்த்தாவாக உச்சத்தில் இருந்த நேரம் 1959இல் கல்யாணப்பரிசு திரைப்படத்தை எழுதி இயக்கினார். இயக்குனராக ஸ்ரீதர் இன் முதல் படமாக அது அமைந்தது. கல்யாணப்பரிசு திரைப்படத்தில் முக்கோண காதல் கதையை ஸ்ரீதர் எடுத்திருந்தார். அப்பப்படும் அன்றைய இளைஞர்கள் இடையே மிகப்பெரிய வரவேற்கப்பட்டது. படம் மாபெரும் வெற்றியை பெற இயக்குனராகவும் தனது முத்திரையை ஸ்ரீதர் பதித்தார்.
அதன் பிறகு நீண்ட சொர்க்கம், தேன்நிலவு, சுமைதாங்கி, நெஞ்சில் ஓர் ஆலயம், போலீஸ்காரன் மகள், நெஞ்சம் மறப்பதில்லை, காதலிக்க நேரமில்லை, வெண்ணிறாடை, நெஞ்சிருக்கும் வரை, ஊட்டி வரை உறவு, சிவந்த மண், உரிமை குரல் என ஏராளமான திரைப்படங்கள் இயக்கினார்.
Also read... வணங்கானில் சூர்யாவிற்கு பதில் பாலா தேர்வு செய்த நடிகர் இவரா? இணையத்தில் வைரலாகும் தகவல்
அவரது கல்யாணப்பரிசு, நெஞ்சில் ஓர் ஆலயம் புகழ் பெற்ற திரைப்படங்கள் முக்கோண காதல் கதையில் அமைந்தவை. அதனால் ஸ்ரீதர் என்றாலே முக்கோண காதல் கதை தான் நினைவுக்கு வரும்.
குடும்பக் கதைகளை எடுத்து வந்த கே எஸ் கோபாலகிருஷ்ணன் திடீரென ஆதிபராசக்தி என்ற புராண படத்த உருவாக்கி திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் இன்ப அதிர்ச்சி அளித்தார். அதேபோல் கமர்சியல் குடும்ப கதைகளை எடுத்து வந்த டி ஆர் ராமண்ணா சக்தி லீலை என்ற புராண படத்தை உருவாக்கினார் அந்த காலத்தில்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Entertainment