ஸ்ரீதேவியின் நினைவுநாள்... மனைவியுடன் கலந்து கொண்ட அஜித்...!

கடந்த ஆண்டு திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி திடீரென்று மரணம் அடைந்தார்.

ஸ்ரீதேவியின் நினைவுநாள்... மனைவியுடன் கலந்து கொண்ட அஜித்...!
கடந்த ஆண்டு திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி திடீரென்று மரணம் அடைந்தார்.
  • News18
  • Last Updated: February 14, 2019, 3:09 PM IST
  • Share this:
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் நினைவுநாளையொட்டி திதி கொடுக்கும் நிகழ்வில் நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் கலந்து கொண்டார். அதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி திடீரென்று மரணம் அடைந்தார். அவரது முதலாம் ஆண்டு நினைவு நாள் வருகிற பிப்ரவரி 24-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

இந்தநிலையில் சென்னை சி.ஐ.டி காலனியில் உள்ள ஸ்ரீதேவியின் இல்லத்தில் அவருக்கு திதி கொடுக்கும் நிகழ்வு நடந்தது. இதில் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் மற்றும் அவரது மகள்கள், அனில் கபூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வின் போது நடிகர் அஜித் அவரது மனைவி ஷாலினியுடன் கலந்து கொண்டார்.
அஜித் அடுத்ததாக நடிக்க இருக்கும் இரண்டு படங்களை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விஜயகாந்த் மகன் விமர்சனத்துக்கு பதிலளித்த சீமான்! - வீடியோ

First published: February 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading