• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Sridevi Vijayakumar: நடிகை ஸ்ரீதேவி விஜயகுமாருக்கு இவ்வளவு பெரிய மகளா?

Sridevi Vijayakumar: நடிகை ஸ்ரீதேவி விஜயகுமாருக்கு இவ்வளவு பெரிய மகளா?

மகள் ரூபிகாவுடன் ஸ்ரீதேவி விஜயகுமார்

மகள் ரூபிகாவுடன் ஸ்ரீதேவி விஜயகுமார்

பூபதி பாண்டியன் இயக்கிய 'தேவதையைக் கண்டேன்' படத்தில், தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஸ்ரீதேவி.

  • Share this:
    தித்திக்குதே, தேவதையைக் கண்டேன் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை ஸ்ரீதேவி தனது மகளின் படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அவருக்கு இவ்வளவு பெரிய மகளா என ரசிகர்கள் ஆச்சர்யமடைந்துள்ளனர்.

    இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் சத்யராஜ், குஷ்பு, கெளதமி ஆகியோர் நடித்த 'ரிக்‌ஷா மாமா' படத்தில் ஸ்ரீதேவி விஜயகுமார் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர் வளர்ந்ததும் ஹீரோயினாக ’தேவதையைக் கண்டேன்’, 'காதல் வைரஸ்', 'பிரியமான தோழி' மற்றும் 'தித்திக்குதே' உள்ளிட்ட சில குறிப்பிடத்தக்க படங்களில் நடித்தார்.

    Sridevi Vijayakumar's photos with her daughter Rupikaa
    மகளுடன் ஸ்ரீதேவி


    குறிப்பாக பூபதி பாண்டியன் இயக்கிய 'தேவதையைக் கண்டேன்' படத்தில், தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஸ்ரீதேவி. இது பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றதோடு விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. இதையடுத்து தொழிலதிபர் ராகுலை மணந்ததும், நடிப்பதில் இருந்து விலகியிருக்கிறார் ஸ்ரீதேவி. அதோடு இவருக்கு ரூபிகா என்ற மகளும் இருக்கிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Sridevi Vijayakumar's photos with her daughter Rupikaa
    ரூபிகா


    இந்நிலையில் மகள் ரூபிகாவுடன் ஒரே மாதிரி கவுன் அணிந்த படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள ஸ்ரீதேவி, ”அவள் என் இதயம், என் ஆத்மா, எனக்கு இதுவரை நிகழ்ந்த மிகச் சிறந்த விஷயம், பல சிரிப்பு மற்றும் ஒரு சில கண்ணீர் துளியின் ஆதாரம், அவள் என் மகள், அவள் என் உலகம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

    ஸ்ரீதேவியையே குழந்தையாக பார்த்து பழகிய ரசிகர்கள், அவருக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா என ஆச்சர்யமடைந்திருக்கிறார்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: