ஸ்ரீதேவியின் மரணம் விபத்து அல்ல; கொலை - திடுக்கிடும் தகவலை வெளியிட்ட கேரள டிஜிபி

ஸ்ரீதேவியின் மரணம் விபத்து அல்ல; கொலை - திடுக்கிடும் தகவலை வெளியிட்ட கேரள டிஜிபி
நடிகை ஸ்ரீதேவி
  • News18
  • Last Updated: July 9, 2019, 12:41 PM IST
  • Share this:
நடிகை ஸ்ரீதேவியின் மரணம் விபத்து அல்ல, கொலை என்று கேரள டிஜிபி ரிஷிராஜ் சிங் கூறியுள்ளார்.

முன்னாள் தடயவியல் நிபுணர் டாக்டர் உமாடாதன் கூறிய விஷயங்களை மேற்கொள் காட்டியிருக்கும் டிஜிபி, ஸ்ரீதேவியின் மரணம் கொலையாக இருக்கலாம் என்று தனது நண்பர் என்னிடம் கூறியிருந்தார் என்றும் கூறுகிறார்.

ஸ்ரீதேவியின் மரணம் குறித்து அறிந்துகொள்ள கேரள டிஜிபி தடயவியல் நிபுணர் டாக்டர் உமாடாதனை நாடியுள்ளார். அப்போது தடயவியல் நிபுணர் தன்னிடம் கூறியதை வெளி உலகுக்கு கூறியுள்ளார் டிஜிபி ரிஷிராஜ் சிங்.


அதில், ஸ்ரீதேவியின் மரணம் குறித்து நடத்தப்படட விசாரணையில் கிடைத்த பல ஆதாரங்களும், தடயங்களும் அவரது மரணம் ஒரு விபத்து அல்ல என்பதை தெரிவிப்பதாக உமாடாதன் கூறியதாக கேரள டிஜிபி தெரிவித்துள்ளார்.

கேரளாவில் பல்வேறு வழக்குகளில் டாக்டர் உமாடாதனின் தடயவியல் நிபுணத்துவம் காரணமாக குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

டாக்டர் உமாடாதன் ஸ்ரீதேவியின் மரணம் குறித்து கூறியது என்னவென்றால், நடிகை ஸ்ரீதேவி அதிகமாகக் குடித்துவிட்டு குளியலறையில் மூழ்கியதாகத்தான் கூறப்படுகிறது. அப்படியே அவர் அதிகமாகக் குடித்திருந்தாலும் வெறும் ஒரு அடி உயரமே இருக்கும் தண்ணீரில் மூழ்கியிருக்க முடியாது. வேறு ஒருவர் அவரது தலையை தண்ணீரில் பிடித்து அழுத்தினால் தவிர, ஒரு அடி தண்ணீரில் நிச்சயம் அவர் மூழ்கி உயிரிழந்திருக்க முடியாது என்று தெரிவித்ததாக டிஜிபி கூறியுள்ளார்.
மறைந்த தடயவியல் மருத்துவர் உமாடாதன்


தேவையான ஆதாரங்கள் கிடைக்காததால் ஸ்ரீதேவியின் மரணம் மர்ம மரணமாகவே முடிந்துவிட்டது என்று கூறியுள்ளார் கேரள டிஜிபி.

உடல்நலக்குறைவால் கடந்த வாரம் உயிரிழந்த டாக்டர் உமாடாதன், கேரள காவல்துறையின் மருத்துவ ஆலோசகராகவும், தடயவியல் மருத்துவ பேராசிரியாகவும் பணிபுரிந்துள்ளார். தடயவியல் நிபுணத்துவம் தொடர்பாக பல்வேறு புத்தகங்களையும் அவர் எழுதியுள்ளார்.

வீடியோ பார்க்க: சர்ச்சையை ஏற்படுத்திய தமிழ் படங்கள்!

First published: July 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்