ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூரை நடிக்க வைக்க தெலுங்கு சினிமா பல காலமாக முயல்கிறது. இதுவரை அவர்களின் வலையில் சிக்காதவர் இப்போது இரட்டை மனநிலையில் இருப்பதாக கூறுகிறார்கள். காரணம், ஜுனியர் என்டிஆரின் படம்.
ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் இப்போது பாலிவுட்டின் நம்பிக்கை நட்சத்திரம். அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பார்வையாளர்களை கலங்கடிப்பது இவரது ஹாபி. சமீபத்தில் இவரது பிகினி உடை புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலானது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்திப் படங்களில் மட்டும் நடித்து வரும் இவரை தெலுங்கில் அறிமுகப்படுத்த பலரும் முயன்றனர். அவர்களுக்கு நோ சொன்ன நிலையில், ஜுனியர் என்டிஆரின் 31-வது படத்தில் நடிக்க மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஜான்வி கபூரை அணுகியுள்ளனர். இவர்கள் தான் ஜுனியர் என்டிஆரின் 31-வது படத்தை தயாரிக்கின்றனர். பிரமாண்டமாக தயாராகும் இந்தப் படத்தை கேஜிஎஃப் படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்குகிறார்.
தெலுங்கில் ஜான்வி கபூர் அறிமுகமாக இதைவிட சிறந்த படம் இருக்க முடியாது என விமர்சகர்கள் கூறியுள்ளனர். ஸ்ரீதேவியின் மகள் ஜுனியர் என்டிஆருக்கு 'எஸ்' சொல்வரா இல்லை 'நோ' தானா என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bollywood, Telugu movie