Home /News /entertainment /

அஜித் நடிக்கும் ஏகே 61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகும் என தகவல்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

அஜித் நடிக்கும் ஏகே 61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகும் என தகவல்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

அஜித்

அஜித்

அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அவருடன் மஞ்சு வாரியர், வீரா, ஜான் கொக்கன், அஜய் மற்றும் சில பிரபலமான நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    அஜித் நடிப்பில் உருவாகி வரும் ஏகே 61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகும் என சமூக வலைதளங்களில் தகவல் பரவியுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.

    அஜித் தனது 61-வது படத்திற்காக மீண்டும் இயக்குனர் ஹெச்.வினோத்துடன் கைகோர்த்துள்ளார். இந்தப் படத்திற்கு தற்காலிகமாக 'அஜித் 61' மற்றும் 'ஏகே 61' என்று பெயரிடப்பட்டுள்ளது. பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான போனி கபூர் ஏகே 61 படத்தை தயாரித்து வருகிறார்.

    ஜூன் தொடக்கத்தில் இதன் ஹைதராபாத் ஷெட்யூல் முடிந்த பிறகு, படத்தின் முக்கிய படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது, 'அஜித் 61' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது.

    ஏறக்குறைய ஒரு மாதமாக படப்பிடிப்புக்கு பிரேக் எடுத்திருந்த அஜித்தை, மீண்டும் 'ஏகே 61' செட்டில் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

    Actress Sridevi : நடிகை ஸ்ரீ தேவியின் சூப்பர் ஹிட் தமிழ் பாடல்கள் தொகுப்பு…

    'அஜித் 61' படம் முதலில் 2022 தீபாவளிக்கு வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால் படப்பிடிப்பில் ஏற்பட்ட தாமதம் காரணமாக வெளியீடு தள்ளி போயுள்ளது. இதையடுத்து படம் டிசம்பரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் ஸ்ரீதேவியின்பிறந்த நாளையொட்டி, ஏகே 61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகும் என சமூக வலைதளங்களில் தகவல் பரவியுள்ளது. இதனால் அஜித்தின் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.

    AK61: அஜித்தின் ஏகே61 படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்?

    வங்கி கொள்ளையை மையப்படுத்தி எடுக்கப்படும் த்ரில்லர் படமான இதில், அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அவருடன் மஞ்சு வாரியர், வீரா, ஜான் கொக்கன், அஜய் மற்றும் சில பிரபலமான நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் மூலம் ஜிப்ரான் முதன்முறையாக அஜித்திற்கு இசையமைக்கிறார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor Ajith

    அடுத்த செய்தி