• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சமந்தா விவகாரம் - ஸ்ரீரெட்டி அளித்த வில்லங்க விளக்கம்!

சமந்தா விவகாரம் - ஸ்ரீரெட்டி அளித்த வில்லங்க விளக்கம்!

ஸ்ரீ ரெட்டி

ஸ்ரீ ரெட்டி

சமந்தா, ப்ரீத்தம் ஜுகல்கருக்குமான நட்பு நிச்சயமாக பிரிவுக்கு காரணமாக இருக்க முடியாது என்று ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி பேட்டியளிக்கிறார் என்றால் திரையுலகம் கிடுகிடுக்கும். பவன் கல்யாண் தொடங்கி நம்மூர் ஏ.ஆர்.முருகதாஸ்வரை நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் என சகல தரப்பினர் மீதும் பாலியல் புகார் வைத்தவர் ஸ்ரீரெட்டி. இன்றைக்கு ஸ்ரீரெட்டி யார் குறித்துப் பேசப்போகிறார் என்று தமிழ், தெலுங்கு திரையுலகம் நெஞ்சில் கை வைத்து காத்திருந்த காலம் ஒன்றிருந்தது. மரம் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை. இதோ மீண்டும் ஸ்ரீரெட்டி.

சமந்தா, நாக சைதன்யா பிரிவுதான் இப்போதுவரைக்கும் தெலுங்கு சினிமாவின் பேசுபொருளாக இருக்கிறது. ஏன் அவர்களுக்குள் விரிசல் என்பதற்கு விடை கண்டுபிடிக்க பலரும் ஆர்வமாக இருக்கின்றனர்.

இந்நிலையில் ஸ்ரீரெட்டிக்கு தெரியாத ரகசியமா என்ற கோணத்தில் அவரின் சமந்தா குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. முக்கியமாக சமந்தாவுக்கும், காஸ்ட்யூம் டிஸைனர் ப்ரீத்தம் ஜுகல்கருக்குமான நட்பே பிரிவுக்கு காரணம் என்ற ஒரு வதந்தி திரையுலகில் உலவுகிறது. இதே கேள்வியை ஸ்ரீரெட்டியிடம் கேட்டுள்ளனர்.

Also read... படப்பிடிப்பின் போது யோகி பாபுவுக்கு ஆச்சரியமளித்த ஷாருக்கான்...!

அதற்கு பதிலளித்தவர், சமந்தா, ப்ரீத்தம் ஜுகல்கருக்குமான நட்பு நிச்சயமாக பிரிவுக்கு காரணமாக இருக்க முடியாதுப்ரீத்தம் ஒரு ஓரினச் சேர்க்கையாளர் என்று தெரிவித்துள்ளார் ஸ்ரீரெட்டி.

ப்ரீத்தம் குறித்து ஸ்ரீரெட்டிக்கு எப்படி தெரியும் என்பதைத் தாண்டி, இந்த விளக்கத்தால் சமந்தா - ப்ரீத்தம் ஜுகல்கர் சர்ச்சை பிசுபிசுத்துப் போயுள்ளது. அந்தவகையில் முதல்முறையாக ஒரு நற்காரியம் செய்துள்ளார் ஸ்ரீரெட்டி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: