ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நயன்தாரா, சமந்தா படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்!

நயன்தாரா, சமந்தா படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்!

 விஜய் சேதுபதி, ஸ்ரீசாந்த்

விஜய் சேதுபதி, ஸ்ரீசாந்த்

இந்த வருடம் சந்தானம் நடிப்பில் வெளியான டிக்கிலோனாவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் நடித்திருந்தார். வரவிருக்கும் விக்ரமின் கோப்ரா படத்தில் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் நடிக்கிறார். இப்போது ஸ்ரீசாந்த் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • 1 minute read
  • Last Updated :

நயன்தாரா, சமந்தா, விஜய் சேதுபதி நடித்திருக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தானா சேர்ந்த கூட்டம் படத்துக்குப் பிறகு விக்னேஷ் சிவன் எழுதி இயக்கியிருக்கும் படம், காத்து வாக்குல ரெண்டு காதல். அவரும், நயன்தாராவும் இணைந்து உருவாக்கிய ரவுடி பிக்சர்ஸ் படத்தை தயாரித்துள்ளது. அனிருத் இசை. படத்தை 2022 பிப்ரவரியில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். சமீபத்தில் நயன்தாராவும், விஜய் சேதுபதியும் தாங்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளின் டப்பிங்கை பேசி முடித்தனர்.

இந்தப் படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் சின்ன வேடத்தில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் இந்திப் படம் ஒன்றில் ஹீரோவாக நடித்து வருகிறார். தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளார்.

இந்த வருடம் சந்தானம் நடிப்பில் வெளியான டிக்கிலோனாவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் நடித்திருந்தார். வரவிருக்கும் விக்ரமின் கோப்ரா படத்தில் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் நடிக்கிறார். இப்போது ஸ்ரீசாந்த் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்துள்ளார்.

Also read... நடிகை அனுஷ்காவின் சொத்து மதிப்பு இவ்வளவா? - இணையத்தில் கசிந்த தகவல்

ஒருபுறம் கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை திரைப்படமாகிறது. இன்னொரு பக்கம் கிரிக்கெட் வீரர்கள் அணியிலிருந்து ரிட்டையர்ட் ஆனதும் சினிமாவில் நடிக்க வந்துவிடுகிறார்கள். சினிமா அளவுக்கு இங்கு பிரபலமாக இருப்பது கிரிக்கெட் மட்டுமே என்பது இதிலிருந்து புரிகிறது.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actress Samantha, Sreesanth