முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / நடிகர் விஜய் சேதுபதியை புகழ்ந்த கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்...!

நடிகர் விஜய் சேதுபதியை புகழ்ந்த கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்...!

விஜய் சேதுபதி, ஸ்ரீசாந்த்

விஜய் சேதுபதி, ஸ்ரீசாந்த்

மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள 'கடைசி விவசாயி' படமும் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :

உங்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன் அண்ணா' என்று நடிகர் விஜய் சேதுபதியை புகழ்ந்த கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்.

விஜய் சேதுபதி நடிப்பில் இந்த மாதம் மட்டும் இதுவரை, ’லாபம்’, ‘துக்ளக் தர்பார்’, ‘அனபெல் சேதுபதி’ உள்ளிட்டப் மூன்று படங்கள் வரிசையாக வெளியாகியுள்ளன. அதோடு, மாஸ்டர் செஃப் ஷோவிலும் பங்கேற்று வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள 'கடைசி விவசாயி' படமும் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Also read... தனுஷ் படம் குறித்து சேகர் கம்முலா வெளியிட்ட அப்டேட்...!

இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதியும், கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தும் நேரில் சந்தித்து உரையாடியுள்ளனர். இந்த புகைப்படங்களை கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், 'உங்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன் அண்ணா’ என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

First published:

Tags: Actor Vijay Sethupathi, Sreesanth