• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Squid Game - நெட்பிளிக்ஸில் 111 மில்லியன் பேர் பார்த்த வெப் தொடர்!

Squid Game - நெட்பிளிக்ஸில் 111 மில்லியன் பேர் பார்த்த வெப் தொடர்!

ஸ்குயிட் கேம் வெப் சீரிஸ்

ஸ்குயிட் கேம் வெப் சீரிஸ்

ஸ்குயிட் கேம் செப்டம்பர் 17 ஆம் தேதி 90 நாடுகளில் வெளியானது. அந்த நாடுகள் அனைத்திலும் அது முதலிடத்தைப் பிடித்தது.

  • News18
  • Last Updated :
  • Share this:
நெட்பிளிக்ஸ் இதுவரை வெளியிட்ட வெப் தொடர்களில் முதல் 28 தினங்களில் அதிகம் பேர் பார்த்த வெப் தொடராக ஸ்குயிட் கேம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

வெப் தொடர்களில் சில ஒரேயொரு சீஸனை கொண்டவை. சில இரண்டு சீஸன்கள். சில பத்து சீஸன்கள்வரை வந்திருக்கின்றன. அதேபோல் ஒரு வருடம் முதல் பத்து வருடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக வருகிற வெப் தொடர்களும் உண்டு. அதனால், எந்தத் தொடரை அதிகம் பேர் பார்க்கிறார்கள் என்பதை கணக்கிடுவது சிரமம். அதற்கு நெட்பிளிக்ஸ் ஒரு தரவு வைத்துள்ளது. ஒரு வெப் தொடர் வெளியான 28 தினங்களில் எத்தனை பேர் அத்தொடரைப் பார்க்கிறார்களோ, அதை கணக்கில் எடுத்துக் கொள்வது

இந்தவரைமுறையின்படி அதிகம் பேர் பார்த்த வெப் தொடராக Bridgerton இருந்தது. அதனை முறியடித்துள்ளது ஸ்குயிட் கேம். 111 மில்லியன் பார்வையாளர்கள் 28 தினங்களில் இந்தத் தொடரைப் பார்த்துள்ளனர். இதற்கு முன் எந்தத் தொடரும் 100 மில்லியன் பார்வைகள் என்ற இலக்கை தொட்டதில்லை.

ஸ்குயிட் கேம் செப்டம்பர் 17 ஆம் தேதி 90 நாடுகளில் வெளியானது. அந்த நாடுகள் அனைத்திலும் அது முதலிடத்தைப் பிடித்தது. இதுவொரு சாதனை. இதற்கு முன் ஆங்கிலம் அல்லாத வெப் தொடர்களில் அதிகம் பேர் பார்த்த வெப் தொடர் லூபின். முதல் 28 தினங்களில் இதனை 76 மில்லியன் பேர் பார்த்திருந்தனர். அதிலிருந்து மிகப்பெரிய வித்தியாசத்தில் முதலிடத்தை வந்தடைந்திருக்கிறது ஸ்குயிட் கேம். ஆங்கிலம் உள்ளிட்ட எந்தவொரு தொடரும் இந்தளவு பார்வையாளர்களை பெற்றதில்லை

Also read... 6 மொழிகளில் வெளியாகும் எட்டர்னல்ஸ் - புதிய போஸ்டர்கள் வெளியீடு!

இந்தப் படத்தை இயக்கியவர் Hwang Dong-hyuk. இவர் 10 வருடங்களுக்கு முன்பு எழுதிய திரைக்கதை இது. அப்போது யாருக்கும் இது பிடிக்கவில்லை. பல படங்கள் இயக்கி, தனக்கென ஒரு பெயர் வந்த பிறகு ஸ்குயிட் கேமை இயக்கினார். இப்போது தொடர் சக்கைப்போடு போடுகிறது. சமந்தா நடித்த பேபி தெலுங்குப் படத்தின் ஒரிஜினல், மிஸ் கிரானி கொரி படத்தை இயக்கியதும் இவர்தான் என்பது முக்கியமானது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: