ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பாலியல் வழக்கில் சிக்கிய ஸ்க்விட் கேம் சீரிஸ் நடிகர்!

பாலியல் வழக்கில் சிக்கிய ஸ்க்விட் கேம் சீரிஸ் நடிகர்!

ஸ்குயிட் கேம்

ஸ்குயிட் கேம்

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்ற ஸ்க்விட் கேம் வெப் சீரிஸில் 78 வயதுடைய நடிகர் ஓ யோங்-சு தற்போது பாலியல் புகாரில் சிக்கியுள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது தென்கொரிய இணைய தொடரான 'ஸ்குவிட் கேம்'. ஹ்வாங் டாங் - ஹியூக் இயக்கிய இந்த தொடர் குழந்தைகள் விளையாடும் விளையாட்டை மையமாக கொண்டு ஆழமான பல கருத்துகளை உள்ளடக்கி விறுவிறுப்பான திரைக்கதையில் உருவாக்கப்பட்டது. மொத்தம் 9 எபிசோடுகள் கொண்ட இந்தத் தொடர் வெளியான முதல் நான்கு வாரங்களில் 1.65 பில்லியன் பார்வையாளர்களால் கண்டுகளிக்கப்பட்டு பெரும் சாதனை படைத்தது.

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட இணையத் தொடர் என்ற பெருமையையும் 'ஸ்குவிட் கேம்' பெற்றிருந்தது. இந்தத் தொடரின் அடுத்த சீசன் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், இந்த வெப் சீரிஸில் நடித்திருந்த ஓ யோங்-சு சிறந்த துணை நடிகருக்கான கோல்டன் குளோப் விருதை வென்றார். 50 ஆண்டுகளுக்கும் மேல் நடித்து வரும் ஓ யோங்-சு, கோல்டன் குளோப் விருது வென்ற முதல் தென்கொரிய நடிகர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், 78 வயதான ஸ்க்விட் கேம் நட்சத்திரமான ஓ யோங்-சு கொரியாவில் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also read... இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது யார் தெரியுமா?

2017ம் ஆண்டு ஒரு பெண்ணை தகாத முறையில் தொட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் அந்த பெண், 2021 டிசம்பரில் ஓ யோங்-சுக்கு எதிராகப் புகார் அளித்துள்ளார். ஆனால் ஓ யோங்-சு மீதான குற்றச்சாட்டில் சரியான விசாரணை இல்லாமல் 2022ல் இந்த வழக்கு முடிக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வேண்டுகோளை ஏற்று தென்கொரிய நீதித்துறை அதிகாரிகள் மீண்டும் ஓ யோங்-சு மீதான விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Entertainment