ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஸ்பைடர்மேன், எக்ஸ்-மேன்களுக்கு ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் கொடுத்தது யார் தெரியுமா?

ஸ்பைடர்மேன், எக்ஸ்-மேன்களுக்கு ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் கொடுத்தது யார் தெரியுமா?

John Dykstra: பேட்மேன் ஃபாரெவர், பேட்மேன் அண்ட் ராபின், ஸ்டூவர்ட் லிட்டில், எக்ஸ்-மென்: ஃபர்ஸ்ட் கிளாஸ், ஸ்பைடர் மேன் மற்றும் ஸ்பைடர் மேன் 2 என்று நாம் கொண்டாடும் பல சூப்பர் ஹீரோக்கள் திரைப்படங்களில் சிறப்பு எஃபெக்ட்ஸ்களையும் வடிவமைத்தவர் டிக்ஸ்ட்ரா. அவரின் பிறந்தநாள் இன்று.!

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

பேட்மேன் ஃபாரெவர், பேட்மேன் அண்ட் ராபின், ஸ்டூவர்ட் லிட்டில், எக்ஸ்-மேன்: ஃபர்ஸ்ட் கிளாஸ், ஸ்பைடர் மேன் மற்றும் ஸ்பைடர் மேன் 2 என்று நாம் கொண்டாடும் பல சூப்பர் ஹீரோக்கள் திரைப்படங்களில் சிறப்பு எஃபெக்ட்ஸ்களையும் வடிவமைத்தவர் டிக்ஸ்ட்ரா. அவரின் பிறந்தநாள் இன்று.!

'உங்களால் கற்பனை செய்ய முடியுமென்றால் அதன் நான் காட்சியில் அமைத்துத் தருவேன்' என்று நிஜத்தில் நடக்க சாத்தியமில்லாத கற்பனைகளுக்கு எல்லாம் உருவம் கொடுத்து திரையையே பிரமாண்டமாக்குபவர் தான் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் நாயகன். 

சாதாரண மனிதன் விரல் நீட்டினால்சிலந்தி வலை வருமா வருமா என்று யோசிக்கும் கணத்திற்குள் அவன் சிலந்தி வலை விட்டு கட்டிடங்களைத் தாண்டிவிடுவான். கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு உள்நுழைவான். இந்தக் காட்சிகளுக்கு பலமே கூடுதலாக அந்த பிரேம்களில் வைக்கப்படும் எஃபெக்ட்கள் தான். கற்பனைகளை காட்சிகளாக வடிவமைத்து கண்முன் ஓட வைக்கும். ஸ்பைடர் மேன் படத்தில் இதுப்போன்று பல காட்சிகளை தத்ரூபமாக வடிவமைத்துள்ளார் இவர்.

அப்படிப்பட்ட ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்களுக்கு முன்னோடியாக விளங்குபவர், ஜான் சார்லஸ் டிக்ஸ்ட்ரா. இவர்  ஜூன் 3, 1947அன்று பிறந்தார்.இவர்  ஒரு அமெரிக்க ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் கலைஞர். திரைப்படத் தயாரிப்பில் கணினிகளைப் பயன்படுத்துவதின் முன்னோடி , பல விருதுகள் மற்றும் பரிசுகளுடன் மூன்று அகாடமி விருதுகளைப் பெற்றவர். 

கடவுள் இருக்காரா? இல்லையா? பதில் சொல்ல வரும் சிபிராஜின் மாயோன்!

லூகாஸ்ஃபில்மின் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பிரிவான இண்டஸ்ட்ரியல் லைட் & மேஜிக்கின் நிறுவனர்களில் இவரும் ஒருவர். இவர் ஸ்டார் வார்ஸின் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்ஸால்  நன்கு அறியப்பட்டவர். இன்றைய VFX எஃபெக்ட்ஸ்களுக்கு எல்லாம் இவர் தான் குருவாகத் திகழ்ந்துள்ளார். காலத்தின் மாற்றத்திற்கு ஏற்ப எஃபெக்ட்ஸ்களின் வளர்ச்சியிலும் இவரது பங்கு இருந்துகொண்டே இருக்கிறது.

பயணம் தொடங்கிய இடம் ..

தொழில்துறை வடிவமைப்பைப் படித்த பிறகு, சைலண்ட் ரன்னிங் ஃபிலிமிங் மாடல் எஃபெக்ட்களில் டக்ளஸ் ட்ரம்புல்லுடன் பணிபுரியும் வேலையை டிக்ஸ்ட்ரா பெற்றார். ஜார்ஜ் லூகாஸ் ஸ்டார் வார்ஸ் திரைப்படத்தின் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் வேலைகளுக்காக ஆட்களைத் தேர்வுசெய்தபோது, ​​அவர் ட்ரம்புலை அணுகினார். அப்போது தான் இண்டஸ்ட்ரியல் லைட் & மேஜிக்கில் கணினி கட்டுப்பாட்டு மோஷன் கேப்சர் கேமரா அமைப்பின் வளர்ச்சிக்கு வழிவகுத்தார். படத்தின் பல அற்புதமான விளைவுகளுக்கு காரணமாக இருந்தது. ஒப்பீட்டளவில் குறைந்த விலையிலும், செகண்ட்ஹேண்ட் விஸ்டாவிஷன் கேமராக்களிலும் ஆஃப் தி ஷெல்ஃப் மைக்ரோ-செயலிகள் கிடைப்பதன் மூலம் இந்த அமைப்பு சாத்தியமானது.

அதே போல் கணினியை வைத்து கேமராக்களை இயக்கும் பழக்கத்தை வளர்த்தவர் என்றே சொல்லலாம். கணினி கட்டுப்பாட்டு மோஷன் கேப்சர் கேமரா எனும் அன்றைய ஆடம்பர வசதிகளை படங்களில் பயன்படுத்தும் வழக்கத்தைக் கொண்டுவந்தார். சுமார் 40 படங்களுக்கு சிறப்பு எஃபெக்ட்கள், காட்சி செறிவுகளைக் வடிவமைத்தவர் இவர்.

Vikram Review : விக்ரம் படம் எப்படி இருக்கு? படத்தை பார்த்துவிட்டு ரிவ்யூ சொன்ன உதயநிதி…

விருதுகள்:

ஸ்டார் வார்ஸ், ஸ்பைடர் மேன் படங்களுக்காக சாட்டர்ன் விருதுகள், பிரைம் டைம் எம்மி விருதுகள், ஹாலிவுட் திரைப்பட விருதுகள், OFTA திரைப்பட விருதுகள், லைப் போர்ஸ் படத்திற்கு சிறந்த சிறப்பு எபெக்ட்களுக்கான சிட்ஜஸ் விருது, ஸ்டவுன்ட் லிட்டில் படத்திற்கு கோல்டன் சாட்டிலைட் விருதுகள், விஷுவல் எஃபெக்ட்ஸ் சொசைட்டி விருதுகள் போற்ற விருதுகளை பெற்றுள்ளார்.

First published:

Tags: Cinema, Spider Man Far from Home