• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Spider-Man: No Way Home படத்தின் இந்திய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Spider-Man: No Way Home படத்தின் இந்திய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Spider man no way home

Spider man no way home

மார்வெல் தயாரிக்கும் சூப்பர் ஹீரோ படங்களில் காட்டப்படும் உலகை மார்வெல் சினிமாடிக் யூனிவர்ஸ் என்பர். அதை வைத்து இதுவரை 26 படங்கள் தயாராகியுள்ளன.

  • Share this:
    மார்வெல் காமிக்ஸ் கதாபாத்திரங்களில் அதிகம் பேர் அறிந்த, அதிகம் பேர் ரசிக்கும் சூப்பர் ஹீரோ ஸ்பைடர் மேன். சூப்பர் மேன், தோர் போன்ற வேற்றுலகவாசிகளை போல் அல்லாமல் ஸ்பைடர் மேன் பூமியைச் சேர்ந்தவர். ஹல்க், கேப்டன் அமெரிக்கா போல் இறுக்கமான நபரல்ல. எளிமையான, கொஞ்சம் அசட்டுத்தனமான பேர்வழி. ஸ்பைடர் மேனை அதிகம் பேர் ரசிக்க இதுவும் காரணம்.

    ஸ்பைடர் மேன் ஹோம் கமிங் (2017), ஸ்பைடர் மேன் ஃபார் ப்ரம் ஹோம் (2019) படங்களின் தொடர்ச்சியாக ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் தயாராகியிருக்கிறது. முதலிரு படங்களை இயக்கிய ஜான் வாட்ஸ் இந்தப் படத்தையும் இயக்கியுள்ளார். க்ரிஷ் மெக்கென்னா, எரிக் சோமர்ஸ் ஆகியோர் இணைந்து இதன் திரைக்கதையை எழுதியுள்ளனர். மார்வெல் ஸ்டுடியோஸ், கொலம்பியா பிக்சர்ஸ் இணைந்து படத்தை தயாரித்துள்ளன. சோனி பிக்சர்ஸ் உலகம் முழுவதும் படத்தை வெளியிடுகிறது.

    ஸ்பைடர் மேனுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்தியாவிலும் அதிகளவில் ரசிகர்கள் உண்டு. ஆகவே, முக்கிய ஹாலிவுட் படங்களைப் போல நோ வே ஹோம் படத்தையும் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் வெளியிடுகின்றனர். இதனால், பிராந்திய மொழி பேசுகிறவர்களையும் படம் சென்று சேரும்.

    மார்வெல் தயாரிக்கும் சூப்பர் ஹீரோ படங்களில் காட்டப்படும் உலகை மார்வெல் சினிமாடிக் யூனிவர்ஸ் என்பர். அதை வைத்து இதுவரை 26 படங்கள் தயாராகியுள்ளன. நோ வே ஹோம் 27-வது படம்.

    ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் படத்தை 2021 டிசம்பர் 17 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிடுகின்றனர். அதே தேதியில் படம் இந்தியாவிலும் ஆங்கிலம் உள்பட நான்கு மொழிகளில் வெளியாகிறது. அதேநாள்தான் அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது.

    இந்த கிறிஸ்துமஸ் சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமையப் போகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: