முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / இந்திய படங்களுக்கு சவால்.. 175 கோடிகளை வசூலித்த ஸ்பைடர் மேன் - நோ வே ஹோம்!

இந்திய படங்களுக்கு சவால்.. 175 கோடிகளை வசூலித்த ஸ்பைடர் மேன் - நோ வே ஹோம்!

ஸ்பைடர் மேன் நோ வே ஹோம்

ஸ்பைடர் மேன் நோ வே ஹோம்

spider man no way home india box office :  ஸ்பைடர் மேன் இந்த வார இறுதிக்குள் அந்த வசூலை கடந்து 200 கோடிகளை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

இந்தியாவில் கடந்த ஞாயிறுவரை சுமார் 175 கோடிகளை வசூலித்து, முன்னணி இந்திய நடிகர்களின் படங்களுக்கு சவால் விட்டுள்ளது ஸ்பைடர் மேன் - நோ வே ஹோம் திரைப்படம்.

டிசம்பர் 16 ஸ்பைடர் மேன் - நோ வே ஹோம் இந்தியாவில் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. முதல் நாளில் இந்தியா முழுவதுமாக 32.67 கோடிகளை வசூல் செய்தது. நெட் கலெக்ஷன். முதல்வார இறுதியில் 100 கோடிகளை படம் கடந்தது. ஸ்பைடர் மேன் - நோ வே ஹோம்ம் படத்தின் இதுநாள்வரையான வசூல் விவரங்க்ள்.

முதல் நாள் வியாழன் - 32.67 கோடிகள்

இரண்டாவது நாள் வெற்றி - 20.37 கோடிகள்

மூன்றாவது நாள் சனி - 26.10 கோடிகள்

நான்காவது நாள் ஞாயிறு - 29.23 கோடிகள்

ஐந்தாவது நாள் திங்கள் - 12.10 கோடிகள்.

ஆறாவது நாள் செவ்வாய் - 10.40 கோடிகள்

இதையும் படிங்க.. தன்னைவிட 8 வயது இளைய நடிகருடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் அனுஷ்கா?

ஏழாவது நாள் புதன் - 8.70 கோடிகள்

எட்டாவது நாள் வியாழன் - 8.50 கோடிகள்

ஒன்பதாவது நாள் வெள்ளி - 6.75 கோடிகள்

பத்தாவது நாள் சனி - 1,010 கோடிகள்

பதினோராவது நாள் ஞாயிறு - 10 கோடிகள்

இதையும் படிங்க.. சமந்தா முதல் சம்யுக்தா வரை.. பிரபலங்களின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்கள்

மொத்தம் - 174.92 கோடிகள் ஆகும். இந்த வருடம் வெளியான அக்ஷய் குமாரின் சூர்யவன்ஷி உள்பட பல படங்களால் ஸ்பைடர் மேன் - நோ வே ஹோம் படத்தின் வசூலை எட்ட முடியவில்லை என்பதே உண்மை. சூர்யவன்ஷி சுமார்  196 கோடிகளை வசூலித்துள்ளது ஸ்பைடர் மேன் இந்த வார இறுதிக்குள் அந்த வசூலை கடந்து 200 கோடிகளை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Hollywood, Kollywood, Tamil Cinema