Home /News /entertainment /

இந்தியாவில் அவென்ஜர்ஸ் சாதனையை ஸ்பைடர் மேன் முறியடிக்குமா?

இந்தியாவில் அவென்ஜர்ஸ் சாதனையை ஸ்பைடர் மேன் முறியடிக்குமா?

ஸ்பைடர் மேன் - நோ வே ஹோம்

ஸ்பைடர் மேன் - நோ வே ஹோம்

ஸ்பைடர் மேன் - நோ வே ஹோம் இந்தியாவில் 2டி, 3டி, ஐமேக்ஸ் ஆகிய மூன்றுவித பார்மெட்களில் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

  • News18
  • Last Updated :
நாளை ஸ்பைடர் மேன் - நோ வே ஹோம் வெளியாகிறது. இந்த வருடம் வெளியான அயல்மொழி திரைப்படங்களில் ஸ்பைடர் மேன் படத்துக்கே அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. மிக அதிகளவில் ஸ்பைடர் மேனுக்கு முன்பதிவு நடந்துள்ளது.

ஐநாக்ஸ் மல்டிபிளக்ஸ் நிறுவனம் இந்தியா முழுவதும் திரையரங்குகள் வைத்துள்ளது. முன்பதிவு தொடங்கிய 24 மணி நேரத்தில் ஸ்பைடர் மேன் - நோ வே ஹோம் படத்திற்கான 1.5 லட்சம் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்ததாக இவர்கள் அறிவித்துள்ளனர். சமீபத்தில் எந்த அயல்மொழிப் படத்துக்கும் இதுபோன்ற பிரமாண்ட முன்பதிவு நடந்ததில்லை.

ஐநாக்ஸ் போன்றே பிவிஆர் நிறுவனமும் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களில் முதல்நாளுக்கான டிக்கெட்டுகளில் ஒரு லட்சம் விற்றுத் தீர்ந்ததாக அறிவித்துள்ளது. பிவிஆர் செயின் ஆஃப் தியேட்டர்ஸில் அயல்மொழிப் படம் ஒன்றுக்கு இத்தனை அதிக முன்பதிவு இதுதான் முதல்முறை என்கின்றனர்.



இந்த முன்பதிவு விவரங்களால் ஸ்பைடர் மேன் முந்தைய அவென்ஜர்ஸ் படங்களின் முதல்நாள் வசூல் சாதனையை முறியடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

2018 வெளியான அவென்ஜர்ஸ் இன்பினிட்டி வார் இந்தியாவில் முதல் நாளில் 31.30 கோடிகளை வசூலித்தது. 2019 வெளியான அவென்ஜர்ஸ் என்ட்கேம் இந்தியாவில் முதல் நாளில் 53.10 கோடிகளை வசூலித்தது.

இவ்விரு படங்கள் கொரோனா நோய்த் தொற்றுக்கு முன்பு வெளியானவை. ஸ்பைடர் மேன் கொரோனா தொற்றுக்குப் பின் வெளியாகிறது. மகாராஷ்டிரா திரையரங்குகளில் இப்போதும் 50 சதவீத பார்வையாளர்களே அனுமதிக்கப்படுகின்றனர்.



இந்தத் தடைகளை கடந்து ஸ்பைடர் மேன் முதல் நாள் வசூலில் சாதனை படைக்கும் என ட்ரேட் அனலிஸ்டுகள் நம்புகிறார்கள். அதற்கேற்ப படத்தை வெளியிடும் சோனி பிக்சர்ஸும் விளம்பரங்களை முடுக்கிவிட்டுள்ளது.

Also read... டான் படத்தின் இசை உரிமை விற்பனை மற்றும் முதல் சிங்கிள் விவரம்

ஸ்பைடர் மேன் - நோ வே ஹோம் இந்தியாவில் 2டி, 3டி, ஐமேக்ஸ் ஆகிய மூன்றுவித பார்மெட்களில் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Entertainment

அடுத்த செய்தி