Home /News /entertainment /

இந்தியாவில் 6 நாட்களில் 130 கோடி வசூலை கடந்த ஸ்பைடர் மேன்- நோ வே ஹோம்

இந்தியாவில் 6 நாட்களில் 130 கோடி வசூலை கடந்த ஸ்பைடர் மேன்- நோ வே ஹோம்

ஸ்பைடர் மேன் நோ வே ஹோம்

ஸ்பைடர் மேன் நோ வே ஹோம்

Spider Man No Way Home Theatre Collection : சில மாநிலங்களில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே திரையரங்கில் அனுமதிக்கப்படும் நிலையில் இப்படியொரு வசூலை படம் பெற்றிருப்பது சாதனை.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
இதுவரை வெளியான ஸ்பைடர் மேன் படங்களில் டிசம்பர் 16 வெளியான ஸ்பைடர் மேன் - நோ வே ஹோம் தனித்துவமானதாக கருதப்படுகிறது. தொய்வில்லாத திரைக்கதை, ஆக்ரோஷமான சண்டைக் காட்சிகள், துல்லியமான வசனங்கள் என பார்வையாளர்களுக்கு முழு விருந்து படைத்துள்ளது.

இந்தியாவில் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகியுள்ள இத்திரைப்படம் முதல் 6 தினங்களில் வரிகள் போக நெட் கலெக்ஷனாக 130 கோடிகளை பெற்றுள்ளது. இதுவொரு சாதனை.

முதல் நாள் வியாழக்கிழமை - 32.67 கோடிகள்
இரண்டாவது நாள் வெள்ளிக்கிழமை - 20.37 கோடிகள்
மூன்றாவது நாள் சனிக்கிழமை - 26.10 கோடிகள்
நான்காவது நாள் ஞாயிற்றுக்கிழமை - 29.23 கோடிகள்
ஐந்தாவது நாள் திங்கள்கிழமை - 12.10 கோடிகள்
ஆறhவது நாள் செவ்வாய்கிழமை - 10.40 கோடிகள்.
மொத்தம் - 130.87 கோடிகள்.

இந்த வசூல் படத்தின் மொத்த கிராஸ் வசூல் அல்ல. வரிகள் போக உள்ள நெட் வசூல். கிராஸ் வசூல் 160 கோடிகளுக்கும் மேல் இருக்கும்.

also read : தேவதை வம்சம் நீயோ! நடிகை மாளவிகா மோகனன் போட்டோஸ்


வார நாள்களிலும் படத்தின் வசூல் இரு இலக்கங்களில் உள்ளது. இதனால் படம் 200 கோடிகளை தாண்டி வசூலிக்கும் என நம்பப்படுகிறது. கொரோனா பெருந்தொற்று காலத்தில், மகாராஷ்டிரா உள்பட சில மாநிலங்களில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே திரையரங்கில் அனுமதிக்கப்படும் நிலையில் இப்படியொரு வசூலை படம் பெற்றிருப்பது சாதனை.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Hollywood

அடுத்த செய்தி