Home /News /entertainment /

இந்தியாவில் 200 கோடிகளை கடந்த ஸ்பைடர் மேன் - நோ வே ஹோம்!

இந்தியாவில் 200 கோடிகளை கடந்த ஸ்பைடர் மேன் - நோ வே ஹோம்!

ஸ்பைடர்மேன் நோ வே ஹோம்

ஸ்பைடர்மேன் நோ வே ஹோம்

இந்தியாவில் அதிகம் வசூலித்த ஹாலிவுட் படங்களில் 2019-ல் வெளியான அவென்ஜர்ஸ் என்ட் கேம் 367.43 கோடிகள் வசூலுடன் முதலிடத்தில் உள்ளது.

இந்தியாவில் ஸ்பைடர் மேன் - நோ வே ஹோம் திரைப்படம் 200 கோடிகளை தாண்டி வசூலித்து, இந்தியாவில் அதிகம் வசூலித்த ஹாலிவுட் படங்களில் 3 வது இடத்தைப் பிடித்துள்ளது.

பல வருடங்களாக இந்தியா ஹாலிவுட் படங்களின் முக்கியமான சந்தையாக மாறி வருகிறது. இந்தியாவின் 135 கோடி மக்கள் தொகை வர்த்தகர்களின் முக்கியமான டார்கெட்டாக உள்ளது. இந்தியர்கள் அனைவரையும் சென்றடையும் விதமாக ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, இந்தி என பிராந்திய மொழிகளிலும் ஹாலிவுட் படங்கள் 'டப்' செய்யப்பட்டு வெளியாகின்றன. ஸ்பைடர் மேன் - நோ வே ஹோம் படமும் அப்படித்தான் வெளியானது.

நான்கு மொழிகளும் சேர்த்து ஜனவரி 2 ஞாயிற்றுக்கிழமை வரை இப்படம் இந்தியாவில் 259.67 கோடிகளை வசூலித்துள்ளது. இது மொத்த கிராஸ் கலெக்ஷன். வரிகள் போக நெட் கலெக்ஷன் 202.34 கோடிகள். இது மூன்றாவது அதிகபட்ச வசூலாகும்.

இந்தியாவில் அதிகம் வசூலித்த ஹாலிவுட் படங்களில் 2019-ல் வெளியான அவென்ஜர்ஸ் என்ட் கேம் 367.43 கோடிகள் வசூலுடன் முதலிடத்தில் உள்ளது. 2018 வெளியான அவென்ஜர்ஸ் இன்பினிட்டி வார் திரைப்படம் 228.50 கோடிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஸ்பைடர் மேன் - நோ வே ஹோம் 202.34 கோடிகளுடன் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இது வரிகள் போக உள்ள நெட் கலெக்ஷனாகும்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் பல மாநிலங்கள் 50 சதவீத பார்வையாளர்களை மட்டுமே திரையரங்கில் அனுமதிக்கிற நிலையில் ஸ்பைடர் மேன் 200 கோடிகளை இந்தியாவில் கடந்திருப்பது சாதனை என்றே சொல்ல வேண்டும். இப்படம் உலக அளவில் 10,000 கோடிகளை கடந்து வசூலித்திருப்பது குறிப்பிடத்தக்கது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Hollywood

அடுத்த செய்தி