• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • தீபாவளிக்கு மோதிக்கொள்ளும் சூப்பர் ஸ்டார்கள்...?

தீபாவளிக்கு மோதிக்கொள்ளும் சூப்பர் ஸ்டார்கள்...?

ரஜினி மற்றும் சிரஞ்சீவி

ரஜினி மற்றும் சிரஞ்சீவி

வரும் தீபாவளிக்கு ரஜினியின் அண்ணாத்த வெளியாகிறது. அவரது முந்தையப் படங்களைப் போல் அண்ணாத்தயும் தெலுங்கில் 'டப்' செய்யப்பட்டு வெளியானால், தெலுங்கு மாநிலங்களில் அண்ணாத்தைக்கு பெரும் சவால் காத்திருக்கிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
தமிழில் ரஜினி எப்படியோ அப்படி தெலுங்கில் சிரஞ்சீவி. எத்தனை பேர் வந்தாலும் தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்றால் இப்போதும் சிரஞ்சீவிதான். இவர்கள் இருவரது படமும் தீபாவளிக்கு மோதிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

தெலுங்குப் படங்கள் வெளியாகும் போது அவை பெரும்பாலும் தமிழில் வெளியாவதில்லை. அரிதாக எப்போதாவது மகேஷ் பாபு படமோ இல்லை பாகுபலி போன்ற படமோ வெளியாகும். ஆனால், தமிழ்ப் படங்கள் அப்படியல்ல. தமிழில் வெளியாகும் அதேநாள் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஆந்திரா, தெலுங்கானாவில் வெளியாகும். இவ்விரு மாநிலங்களும் தமிழ் சினிமாவின் முக்கிய சந்தைகள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வரும் தீபாவளிக்கு ரஜினியின் அண்ணாத்த வெளியாகிறது. அவரது முந்தையப் படங்களைப் போல் அண்ணாத்தயும் தெலுங்கில் 'டப்' செய்யப்பட்டு வெளியானால், தெலுங்கு மாநிலங்களில் அண்ணாத்தைக்கு பெரும் சவால் காத்திருக்கிறது. சிரஞ்சீவி நடித்து வரும் ஆச்சார்யா படத்தையும் தீபாவளியை முன்னிட்டு வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆச்சார்யாவில் சிரஞ்சீவியுடன் அவரது மகன் ராம் சரணும் நடித்துள்ளார். கொரட்டல சிவா இயக்கம். ராம் சரணே படத்தை தயாரித்தும் உள்ளார். ஆச்சார்யாவை தெலுங்கு, தமிழ் இரு மொழிகளில் வெளியிடும் எண்ணமும் அவர்களிடம் உள்ளது. அவர்கள் திட்டப்படி அனைத்தும் அமைந்தால் தீபாவளிக்கு ரஜினி, சிரஞ்சீவி படங்கள் நேருக்கு நேர் மோதும். ஆந்திரா, தெலுங்கானாவில் அண்ணாத்தக்கும்தமிழ்நாட்டில் ஆச்சார்யாவுக்கும் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் வரலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: