‘எழுந்து வா இசையே’.. எஸ்.பி.பி.க்கு பாடல் பாடி அஞ்சலி செலுத்திய இலங்கை இசைக்கலைஞர்கள்..

Youtube Video

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு இலங்கை இசைக் கலைஞர்கள் சேர்ந்து இசை அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

  • Share this:
கொரோனாவால் பாதிக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒன்றரை மாதத்துக்கு மேலாக அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், செப்டம்பர் 24-ஆம் தேதி அவர் உயிரிழந்தார். அவரது மறைவு உலகம் முழுவதும் இருக்கும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

அந்த வகையில் இலங்கையைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் ஒன்றிணைந்து எஸ்.பி.பி.க்கு  ‘எழுந்து வா இசையே’ எனத் தொடங்கும் அஞ்சலிப் பாடல் ஒன்றைப் பாடி, அதை வீடியோவாக வெளியிட்டுள்ளனர். இந்தப் பாடலை இலங்கை கவிஞர் அஸ்மின் எழுதியுள்ளார். தற்போது இந்தப் பாடல் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலியாவில் இருக்கும் இலங்கையைச் சேர்ந்த இசையமைப்பாளர் அருண் குமாரசாமி இசையமைத்திருக்கும் இந்தப் பாடலை இலங்கையின் பிரபல பாடகர்களான எம்.சிவகுமார், கே.மகிந்தகுமார், பிரேமானந்த், சுருதி பிரபா, நிலுக்ஸி ஜெயவீரசிங்கம், நித்தியாந்தன், கிருஸ்ண குமார், கந்தப்பு ஜெயந்தன், கே.சுஜீவா,மடோனா, அருண்குமாரசுவாமி ஆகியோர் பாடியுள்ளனர். ஆஸ்திரேலியாவின் வொண்டர் மீடியா புரொடக்‌ஷன்  ‘எழுந்து வா’ இசையே பாடலை தயாரித்துள்ளது.இதுகுறித்து நம்மிடம் பேசிய இலங்கை கவிஞர் அஸ்மின், கொரோனா ஊரடங்கால் இந்தப் பாடல் தயாரிப்பதிலும், வெளியிடுவதிலும் தாமதமானதாக தெரிவித்தார்.இவர் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்த போது ‘வானே இடிந்ததம்மா’ என்ற பாடலை எழுதியவர். மேலும் தமிழில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான் ‘நான்’ திரைப்படத்தில் தப்பெல்லாம் தப்பே இல்லை’ பாடலையும் எழுதியுள்ளார்.
Published by:Sheik Hanifah
First published: