Home /News /entertainment /

எஸ்.பி.பாலசுப்ரமணியம் குணமடைய சபரிமலையில் சிறப்பு பிரார்த்தனை

எஸ்.பி.பாலசுப்ரமணியம் குணமடைய சபரிமலையில் சிறப்பு பிரார்த்தனை

எஸ்.பி. பாலசுப்ரமணியம் விழிப்புணர்வு பாடல்

எஸ்.பி. பாலசுப்ரமணியம் விழிப்புணர்வு பாடல்

சபரிமலையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குணமடைய சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

    தமிழ் இசை உலகம் மட்டும் அல்ல 18 இந்திய மொழிகளில் 40,000 பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்த பாடல்களின் பிரம்மாவாக வாழ்ந்து வருபவர் எஸ்.பி பாலசுப்பிரமணியம்.

    அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக கடந்த 5-ம் தேதியில் இருந்து சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை கடந்த 13-ம் தேதியில் இருந்து மோசம் அடைந்தது. நுரையீரல் தொற்று கடுமையாக தாக்கி நுரையீரல் செயலிழக்கும் நிலைக்கு சென்றதால் செயற்கை சுவாசமும், எக்மோ சிகிச்சையும் கொடுக்க முடிவெடுத்தனர் மருத்துவர்கள்.

    தொடர்ந்து 9 நாள்களாக செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ கருவிகளின் உதவியுடன் சிகிச்சைப் பெற்றுவருகிறது. நேற்று, எஸ்.பி.பி உடல் நலம் பெற்று மீண்டு வருவதற்கா திரையுலகத்தின் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். நேற்று, இந்திய அளவில் ’GetWellSoonSPBSir" என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனது. இந்தநிலையில், கேரளா மாநிலத்திலுள்ள சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் எஸ்.பி.பி குணமடைய வேண்டி சிறப்பு உஷா பூஜை செய்யப்பட்டு சிறப்பு பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.
    Published by:Karthick S
    First published:

    அடுத்த செய்தி