பொங்கல் தினத்தன்று குடும்பத்தன்று டிவியில் சிறப்பு திரைப்படங்களை பார்ப்பது சம்பிரதாயங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது. விடுமுறை தினங்கள் என்றாலே டிவியில் என்ன படங்கள் ஒளிபரப்பாகப்போகிறது என்ற எதிர்பார்ப்பு துவங்கிவிடும். அந்த வகையில், வயகாம் 18 இன் தமிழ் பொழுதுபோக்கு சேனலான கலர்ஸ் தமிழ், ஜனவரி 14, 2023 சனிக்கிழமை முதல் பிரத்யேகமாகத் தொகுக்கப்பட்ட திரைப்படங்களின் வரிசையை கொண்டு வர உள்ளது. பொங்கல் பண்டிகையை பார்வையாளர்கள் மகிழ்வுடன் கழிக்கும் வகையில், ஒரு யமனின் காதல் கதையின் உலகத் தொலைக்காட்சி பிரீமியருடன் தொடங்கி நித்தம் ஒரு வானம் திரைப்படத்தின் உலகத் தொலைக்காட்சி பிரீமியர் வரை வரிசையாக வழங்க உள்ளது.
பொங்கல் பண்டிகையை பொழுதுபோக்குடன் கழிக்க கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திரைப்படங்களை, 14 ஜனவரி 2023 சனிக்கிழமை முதல் 17 ஜனவரி 2023 செவ்வாய் வரை காண தவறாதீர்கள். திரைப்பட மாரத்தான் தொடக்கத்தில், ஒரு யமனின் காதல் கதையின் உலகத் தொலைக்காட்சி பிரீமியர் 14 ஜனவரி 2023, சனிக்கிழமை மதியம் 1:00 மணிக்கு கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகிறது. நடிகர் துல்கர் சல்மான், நடிகர் விஷ்ணு உன்னிகிருஷ்ணன் மற்றும் நடிகர் சௌபின் ஷாஹிர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, 15 ஜனவரி, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2:30 மற்றும் மாலை 5:30 மணிக்கு முதன்முறையாகத் ட்ரிகர் திரைப்படத்தின் உலகத் தொலைக்காட்சி பிரீமியர், கலர்ஸ் தமிழ் ஒளிபரப்பாகவுள்ளது. த்ரில்லர் திரைப்படமான இதில் நடிகர் அதர்வா பிரபாகரன் என்னும் கதாபாத்திரத்தில் தலைமறைவான போலீஸ்காரராக நடித்திருக்கிறார்.குழந்தை கடத்தல் மோசடியின் பின்னணியை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.
இது மட்டுமின்றி, 16 ஜனவரி 2023, திங்கட்கிழமை, முறையே மதியம் 2:30 மற்றும் மாலை 5:00 மணிக்கு பஃபூன் மற்றும் பாஸ்கர் தி ராஸ்கல் திரைப்படங்கள் ஒளிபரப்பாகவிருக்கிறது. 17 ஜனவரி 2023 செவ்வாய்க் கிழமையன்று மதியம் 1:30 மணிக்கு நித்தம் ஒரு வானத்தின் உலகத் தொலைக்காட்சி பிரீமியரை ஒளிபரப்புகிறது கலர்ஸ் தமிழ். நடிகர் அசோக் செல்வன், நடிகர் அபர்ணா பாலமுரளி மற்றும் நடிகை ரிது வர்மா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படம் நம்பிக்கைகள், காதல் மற்றும் புதிய தொடக்கங்களை ஆராய்கிறது. அர்ஜுன் (அசோக் செல்வன்) என்ற OCD எனும் அப்செசிவ்-கம்பல்சிவ் கோளாறு உள்ள உள்முக சிந்தனையாளரின் வாழ்க்கையை பதிவு செய்திருக்கிறது. இந்தத் திரைப்படம், உண்மையான மனிதர்களை அடிப்படையாகக் கொண்ட இரண்டு கதைகளைப் படித்து அவற்றின் முடிவுகளைத் தேடிச் செல்லும் அவரது பயணத்திற்கு சாட்சியாக இருக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.