Home » News » Entertainment » CINEMA SPB HEALTH UPDATE TODAY MSB

எஸ்.பி.பி எழுந்து அமர்கிறார்... நுரையீரல் செயல்பாட்டில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது - எஸ்.பி.சரண் தகவல்

தனது தந்தையின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக எஸ்.பி.சரண் தெரிவித்துள்ளார்.

எஸ்.பி.பி எழுந்து அமர்கிறார்... நுரையீரல் செயல்பாட்டில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது - எஸ்.பி.சரண் தகவல்
எஸ்.பி.பாலசுப்ரமணியம்
  • News18 Tamil
  • Last Updated: September 14, 2020, 6:44 PM IST
  • Share this:
கொரோனா தொற்று காரணமாக கடந்த மாதம் 5-ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அனுமதிக்கப்பட்டார்.

அதனைத்தொடர்ந்து 14-ம் தேதி அவரது உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டு வெண்டிலேட்டர், எக்மோ கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம் முதலே அவரது உடல்நிலையில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக அவரது மகன் எஸ்.பி.பி.சரண் தெரிவித்து வந்தார்.

இன்று அவர் வெளியிட்டிருக்கும் வீடியோ பதிவில் கூறியுள்ளதாவது, “கடைசியாக 10-ம் தேதி உங்களுக்கு அப்டேட் கொடுத்திருந்தேன். இந்த 4 நாட்களில் அப்பாவின் உடல்நிலையில் முன்னேற்றம் தெரிகிறது. நுரையீரல் செயல்பாட்டில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.


பிசியோதெரபி சிகிச்சையும் தொடர்ந்து வருகிறது. அப்பா அதில் சுறுசுறுப்பாக பங்கேற்று வருகிறார். மருத்துவர்கள் உதவியுடன் 15 முதல் 20 நிமிடங்கள் அப்பாவால் உட்கார முடிகிறது. வாய் வழியாக சாப்பிட வைப்பதற்கான முயற்சிகள் நடக்கின்றன.



அப்பாவின் உடல்நிலையில் முன்னேற்றம் தொடர்கிறது. உங்கள் அன்பு, அக்கறை மற்றும் பிரார்த்தனைகளுக்கு நன்றி” இவ்வாறு எஸ்.பி.சரண் தெரிவித்துள்ளார்.
First published: September 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading