Home /News /entertainment /

எஸ்.பி.பி. சுயநினைவுடன் இருக்கிறார் - மருத்துவமனை அறிக்கை

எஸ்.பி.பி. சுயநினைவுடன் இருக்கிறார் - மருத்துவமனை அறிக்கை

எஸ்.பி.பாலசுப்ரமணியம்

எஸ்.பி.பாலசுப்ரமணியம்

பாடகர் எஸ்.பி.பி.யின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவர் சுயநினைவுடன் இருப்பதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி.பி கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆகஸ்ட் 14-ம் தேதி திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து வெண்டிலேட்டர், எக்மோ கருவியின் உதவியுடன் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    ஒவ்வொரு நாளும் எஸ்.பி.பி.யின் உடல்நிலை குறித்து மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று எம்.ஜி.எம். ஹெல்த் கேர் மருத்துவமனை தரப்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், “மருத்துவர்கள் சொல்வதை ஏற்று உடல் அசைவுகளை செய்யும் நிலையில் உள்ளார் . அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை ஏற்கும் நிலையில் அவரது உடல்நிலை இருக்கிறது. உடல்நிலை சீராக இருந்தாலும் தொடர்ந்து செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ சிகிச்சை தொடர்கின்றது” என்று கூறப்பட்டுள்ளது.



     




    View this post on Instagram





     

    A post shared by S. P. Charan/Producer/Director (@spbcharan) on






    தனது தந்தையின் உடல்நிலை குறித்து எஸ்.பி.சரண் வெளியிட்டிருக்கும் வீடியோ பதிவில், நேற்று முன் தினம் இருந்ததை விட நுரையீரல் செயல்பாட்டில் முன்னேற்றம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இவை எல்லாம் பாசிட்டிவ்வான அறிகுறிகள். மருத்துவர்கள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். எனது தந்தைக்காக பிரார்தித்த அத்தனை பேருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: S.P.Balasubramaniyam

    அடுத்த செய்தி