Home /News /entertainment /

எஸ்.பி.பி உடல்நிலை குறித்து மகிழ்ச்சியான செய்தி சொன்ன எஸ்.பி.சரண்

எஸ்.பி.பி உடல்நிலை குறித்து மகிழ்ச்சியான செய்தி சொன்ன எஸ்.பி.சரண்

எஸ்.பி.பாலசுப்ரமணியம்

எஸ்.பி.பாலசுப்ரமணியம்

எஸ்.பி.பி. உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக அவரது மகன் எஸ்.பி.சரண் தெரிவித்துள்ளார்.

    கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி.பி கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆகஸ்ட் 14-ம் தேதி திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து வெண்டிலேட்டர், எக்மோ கருவியின் உதவியுடன் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    ஒவ்வொரு நாளும் அவரது உடல்நிலை குறித்து மக்களுக்கு தெரிவித்து வருகிறார் அவரது மகன் எஸ்.பி.சரண். அதன்படி அவர் இன்று வெளியிட்டிருக்கும் வீடியோவில், உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தி. இன்று மதியம் மருத்துவமனைக்குச் சென்றேன். அப்பாவுக்கு சிகிச்சை தரும் மருத்துவர்களை சந்தித்து பேசினேன். இரண்டு நாட்களுக்கு முன்னர் அவரை நான் சந்தித்தபோது எப்படி இருந்தாரோ அதைவிட தற்போது அவரது உடல்நிலை தேறியிருக்கிறது. நுரையீரல் செயல்பாட்டில் முன்னேற்றம் இருப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள்.

    மயக்க நிலையிலிருந்து மீண்டிருக்கிறார். இந்த நோயிலிருந்து மீண்டு வரும் பாதையில் முதல்படி எடுத்து வைத்திருப்பதாக மருத்துவர்கள் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்கள். இன்னும் படிப்படியாக அப்பா மீள்வார். முன்னர் நான் அவரைப் பார்த்ததை விட இன்று இன்னும் விழிப்புடன் இருக்கிறார். என்னிடம் ஏதோ எழுதிக்காட்ட நினைத்தார். ஆனால் அவரால் பேனாவை சரியாக பிடிக்க முடியவில்லை. விரைவில் அவரால் என்னிடம் தொடர்புகொள்ள முடியும் என்று நம்புகிறேன்.



     




    View this post on Instagram





     

    A post shared by S. P. Charan/Producer/Director (@spbcharan) on






    அப்பாவுக்கு செய்திகளை படித்துக்காட்டச் சொல்லி மருத்துவர்களிடம் கேட்டுக்கொண்டேன். செய்தி கேட்பது பரவாயில்லையா என்று அப்பாவிடம் கேட்டேன். அவர் தலையை அசைத்து சரி என்றார். அப்பா தொடர்ந்து இசை கேட்கிறார். விரல்களை அசைக்கிறார். இவை அனைத்தும் அவர் மீண்டு வருகிறார் என்பதற்கான அறிகுறிகள். நான் மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன். உங்கள் அனைவரது பிரார்த்தனைகளுக்கும், அன்புக்கும் நன்றி" என்று கூறியுள்ளார்.



    அதேபோல் எம்.ஜி.எம் ஹெல்த் கேர் மருத்துவமனை இன்று வெளியிட்டிருக்கும் எஸ்.பி.பியின் உடல்நிலை குறித்த அறிக்கையிலும், அவருக்கு வெண்டிலேட்டர், எக்மோ கருவியின் உதவியுடன் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும், உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும், சுயநினைவுடன் இருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளது.
    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: S.P.Balasubramaniyam

    அடுத்த செய்தி