முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / எஸ்.பி.பி. மறைவுக்குப் பின்... எஸ்.பி.பி.சரணின் உருக்கமான ஸ்டேட்மெண்ட்!

எஸ்.பி.பி. மறைவுக்குப் பின்... எஸ்.பி.பி.சரணின் உருக்கமான ஸ்டேட்மெண்ட்!

எஸ்.பி.பி.சரண் மற்றும் எஸ்.பி.பி

எஸ்.பி.பி.சரண் மற்றும் எஸ்.பி.பி

எஸ்.பி.பி. இறுதிநாள்களில் நடத்திய கச்சேரிகள்தான் பொருளாதாரரீதியாக மிகவும் உதவிகரமாக இருந்தது என கூறியுள்ள சரண், தொடர்ச்சியாக எஸ்.பி.பி. குரலில் கச்சேரிகள் நடத்தயிருப்பதாக தெரிவித்துள்ளார்.

  • Last Updated :

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்.பி.பி.சரண் படங்கள் தயாரித்து கடும் நஷ்டத்தை அடைந்ததால் எஸ்.பி.பி. இருக்கும்போதே பல்வேறு விமர்சனங்கள் அவர்மீது வைக்கப்பட்டன. இப்போது எஸ்.பி.பி. இல்லை. என்ன செய்கிறார் எஸ்.பி.பி.சரண்.

சினிமா மீது கொண்ட காதலில் தனது நண்பன் வெங்கட்பிரபுவை நாயகனாக்கி உன்னை சரணடைந்தேன் படத்தை முதல் முதலில் தயாரித்தார் சரண். நல்ல படம் என்ற விமர்சனத்துடன் விருதும் கிடைத்தது. ஆனால், படம் ஓடவில்லை, நஷ்டம். அடுத்து தெலுங்கு வர்ஷம் படத்தின் உரிமையை வாங்கி மழை என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்தார். அது முதல் படத்தைவிட அதிக நஷ்டத்தைக் கொடுத்தது. அதனையடுத்து, நடிகராக தத்தளித்துக் கொண்டிருந்த வெங்கட்பிரபுவை இயக்குனராக்கி சென்னை 28 படத்தை தயாரித்தார். படம் ஹிட். சின்ன நடிகர்களின் படம் என்பதால், குறைவான தொகைக்கு படத்தை விற்றிருந்தார். அதன் காரணமாக அப்படமும் அதிக லாபமில்லாமல் போனது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தியாகராஜன் குமாரராஜா என்ற திறமையான இயக்குனரை சரண்தான் அறிமுகப்படுத்தினார். இன்றைக்கு கொண்டாடப்படும் ஆரண்ய காண்டம், அது வெளியான போது கவனிக்கப்படாமல் சரணுக்கு நஷ்டத்தை தந்தது. இப்படி தயாரித்த அனைத்துப் படங்களும் நஷ்டமாகி எஸ்.பி.பி. சம்பாதித்ததில் கணிசமானது கரைந்தது. இப்போது அவரும் இல்லை.

Also read... Sudeep: அரசு பள்ளியை தத்தெடுத்த சுதீப் - குவியும் வாழ்த்துகள்!

எஸ்.பி.பி. இறுதிநாள்களில் நடத்திய கச்சேரிகள்தான் பொருளாதாரரீதியாக மிகவும் உதவிகரமாக இருந்தது என கூறியுள்ள சரண், தொடர்ச்சியாக எஸ்.பி.பி. குரலில் கச்சேரிகள் நடத்தயிருப்பதாக தெரிவித்துள்ளார். சரணின் குரல் பெருமளவு அவரது தந்தையின் குரலை ஒத்திருக்கும். அத்துடன் தெலுங்கு தொலைக்காட்சியில் எஸ்.பி.பி. தொகுத்து தொகுத்து வழங்க இருப்பதாகவும் சரண் கூறியுள்ளார்.

First published:

Tags: Spb