Film Festival: ஏப்ரல் 19 முதல் 22-ம் தேதி வரை சென்னையில் ஸ்பானிஷ் திரைப்பட விழா!

Film Festival: ஏப்ரல் 19 முதல் 22-ம் தேதி வரை சென்னையில் ஸ்பானிஷ் திரைப்பட விழா!

சென்னையில் ஸ்பானிஷ் திரைப்பட விழா!

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அலையன்ஸ் பிரான்சியஸேயில் வரும் 19 முதல் 22-ம் தேதி வரை ஸ்பானிஷ் திரைப்பட விழா நடக்கிறது. சென்னை திரைப்பட விழாவை நடத்தும் இன்டோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன், நியூடெல்லியில் உள்ள ஸ்பெயின் எம்பஸியுடன் இணைந்து இதனை நடத்துகிறது.

  • Share this:
    சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அலையன்ஸ் பிரான்சியஸேயில் வரும் 19 முதல் 22-ம் தேதி வரை ஸ்பானிஷ் திரைப்பட விழா நடக்கிறது. சென்னை திரைப்பட விழாவை நடத்தும் இன்டோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன், நியூடெல்லியில் உள்ள ஸ்பெயின் எம்பஸியுடன் இணைந்து இதனை நடத்துகிறது.

    மூன்று தினங்கள் நடக்கும் இந்த திரைப்பட விழாவில் கடந்த வருடங்களில் ஸ்பெயினில் வெளியான முக்கியமான ஐந்து திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.

    Champions - ஏப்ரல் 19 மாலை 6 மணி

    சொந்த வாழ்க்கையிலும், தொழில்வகையிலும் பிரச்சனைகளை சந்தித்துவரும் பாஸ்கட்பால் கோச், குடியில் விழுகிறார். அவர் போதையில் ஒரு போலீஸ் வண்டியை இடித்துவிட வழக்கு கோர்ட்டுக்கு வருகிறது. இரண்டு வருட ஜெயில் தண்டனை, அல்லது 90 நாள்கள் சமூக சேவை இந்த இரண்டில் ஒன்றை ஏற்றுக் கொண்டாக வேண்டிய நிலையில், கோச் பின்னதை தேர்வு செய்கிறார். மனநிலை குன்றியவர்களை கொண்ட, நண்பர்கள் என்ற பாஸ்கட்பால் அணிக்கு அவர் பயிற்சி கொடுக்க பணிக்கப்படுகிறார். அது அந்த கோச்சை எப்படி மாற்றியது என்பது கதை. சீரியஸாக தெரிந்தாலும் நகைச்சுவை இழையோடும் படம் இது. 13 சர்வதேச விருதுகளை இப்படம் பெற்றுள்ளது.

    The Giant - ஏப்ரல் 20 மாலை 6 மணி

    இதுவொரு ஃபீரியட் ட்ராமா. உலகில் அதிக உயரம் கொண்ட மனிதனை சுற்றி நடக்கும் பங்காளி சண்டையைப் பற்றியது. 2017 இல் இப்படம் வெளியான போது கலவையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதுவரை 19 சர்வதேச விருதுகளை இப்படம் பெற்றுள்ளது.

    Box 507 - ஏப்ரல் 21 மாலை 6 மணி

    இதுவொரு க்ரைம் த்ரில்லர். வங்கி மேலாளரின் டீன்ஏஜ் மகள் காட்டுத் தீயில் சிக்கி இறந்து போகிறாள். ஏழு வருடங்கள் கழித்து அவர் பணிபுரியும் வங்கியின் லாக்கர்களை உடைத்து கொள்ளையடிக்கிறார்கள். அதில் ஒரு லாக்கரில் இருக்கும் ஆவணங்களைப் பார்க்கும் வங்கி மேலாளருக்கு, ஏழு வருடங்களுக்கு முன் தனது மகள் இறந்தது விபத்தில் அல்ல, அது திட்டமிட்ட கொலை என்று தெரிய வருகிறது. அதற்கு காரணமானவனை பழிவாங்க நினைக்கிறார். அதேநேரம் அந்த ஆவணங்களுக்குரியவனும் அதை கைப்பற்றிட முயற்சிக்கிறான். அவன் ஒரு டான். மேலாளரால் அவனை பழிவாங்க முடிந்ததா என்பது கதை. பத்து விருதுகளை இப்படம் பெற்றுள்ளது.

    Happy 140 - ஏப்ரல் 22 மாலை 6 மணி

    ஒரு சாதாரண பெண்மணிக்கு 140 மில்லியன் யூரோக்கள் லாட்டரில் பரிசாகக் கிடைக்கிறது. இந்த ஜாக்பாட் அந்தப் பெண்மணியின் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்பது கதை. ஒரு கூட்டம் நண்பர்களும், உறவினர்களும் ஒரு அழகான சுற்றுலா பங்களாவில் ஒன்று கூடும் பின்னணியில் நகைச்சுவை, சென்டிமெண்ட், வன்முறை எல்லாம் கலந்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இரு விருதுகளை வென்றுள்ளது.

    Butterfly Tongue - ஏப்ரல் 22 இரவு 7.5 மணி

    இதுவொரு ப்ரீயட் திரைப்படம். வெள்ளந்தியான ஒரு சிறுவனின் பார்வையில் படம் நகர்கிறது. முதல்நாள் வகுப்பு, ஆசிரியர் அறிமுகம், நண்பர்கள், பெண் சினேகிதி என்று குதூகலமாகச் செல்லும் வாழ்க்கையில், பாசிஸ்ட் தீவிரவாதிகள் இடையூறு செய்கின்றனர். ஸ்பெயின் குடியரசுக்கு எதிராக அவர்கள் நடத்தும் வன்முறையால் அனைவரது வாழ்வும் தலைகீழாக புரட்டிப் போடப்படுகிறது. 1999 இல் வெளியான இத்திரைப்படம் 6 விருதுகளை பெற்றுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: