Home /News /entertainment /

அப்பாவுக்கு பிசியோதெரபி சிகிச்சை செய்திருக்கிறார்கள் - எஸ்.பி.சரண் தகவல்

அப்பாவுக்கு பிசியோதெரபி சிகிச்சை செய்திருக்கிறார்கள் - எஸ்.பி.சரண் தகவல்

எஸ்.பி.பி.க்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டிருப்பதாக அவரது மகன் எஸ்.பி.சரண் தெரிவித்திருக்கிறார்.

    கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி.பி கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆகஸ்ட் 14-ம் தேதி திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து வெண்டிலேட்டர், எக்மோ கருவியின் உதவியுடன் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    கடந்த சில நாட்களாகவே அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக எஸ்.பி.சரண் தெரிவித்து வருகிறார். மேலும் ஒவ்வொரு நாளும் தனது தந்தையின் உடல்நிலை குறித்து வீடியோவும் வெளியிட்டு வருகிறார். அதன்படி நேற்று எஸ்.பி.சரண் வெளியிட்ட வீடியோவில், “நுரையீரல் செயல்பாட்டில் முன்னேற்றம் இருப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள். மயக்க நிலையிலிருந்து மீண்டிருக்கிறார். இந்த நோயிலிருந்து மீண்டு வரும் பாதையில் முதல்படி எடுத்து வைத்திருப்பதாக மருத்துவர்கள் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.

    இந்நிலையில் இன்று எஸ்.பி.பி.யின் உடல்நிலை குறித்து எஸ்.பி.சரண் வெளியிட்டிருக்கும் வீடியோவில், “நான் இன்று அப்பாவைச் சென்று பார்க்கவில்லை. இன்று அப்பாவுக்கு மருத்துவர்கள் பிசியோதெரபி சிகிச்சை அளித்திருக்கிறார்கள். அப்பா தொடர்ந்து நல்ல நிலையில் இருக்கிறார். இது ஒரு நல்ல அறிகுறிதான்.



     




    View this post on Instagram




     

    #SPB Health update 27/8/20


    A post shared by S. P. Charan/Producer/Director (@spbcharan) on






    பிரார்த்தனை செய்த உங்கள் அனைவருக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன். விரைவில் நல்ல செய்திகள் வரும் என நம்புகிறேன். அப்பா ஆரோக்கியத்துடன் குணமாகிக் கொண்டு வருகிறார்” என்று இன்றைய வீடியோவில் எஸ்.பி.சரண் தெரிவித்துள்ளார்.
    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: S.P.Balasubramaniyam

    அடுத்த செய்தி