Home /News /entertainment /

SP Balasubramaniyam | எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை சீராக உள்ளது - மருத்துவமனை நிர்வாகம்

SP Balasubramaniyam | எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை சீராக உள்ளது - மருத்துவமனை நிர்வாகம்

எஸ்.பி.பாலசுப்ரமணியம்

எஸ்.பி.பாலசுப்ரமணியம்

கொரோனா பாதித்து மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள எஸ்.பி பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா நோய் தொற்று உறுதியானதால் கடந்த 5-ம் தேதி, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதனிடையே, தனது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் வீடியோ வெளியிட்டார். இந்நிலையில், திடீரென உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவரின் உடல்நிலையை மருத்துவ வல்லுநர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விரைந்து உடல் நலம் பெற வேண்டும் என முன்னணி நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள் உள்ளிட்டோர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

இதனிடையே தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர் செயற்கை சுவாசம் பெற்று வந்தாலும் கடந்த 24 மணி நேரமாக அவர் உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

 
Published by:Vijay R
First published:

Tags: S.P.Balasubramaniyam

அடுத்த செய்தி