Home /News /entertainment /

RIP SPB | திரையுலகில் எஸ்.பி.பி வென்ற விருதுகளின் பட்டியல்..!

RIP SPB | திரையுலகில் எஸ்.பி.பி வென்ற விருதுகளின் பட்டியல்..!

எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

SP Balasubramanyam | இயக்குநர் கே.பாலச்சந்தர் தான் இயக்கிய ஏக் துஜே கேலியே படத்தின் மூலம் எஸ்.பி.பி-யை இந்தியில் அறிமுகம் செய்தார். அப்போது எஸ்.பி.பி-க்கு இந்தி துளியும் தெரியாது.

    பாடும் நிலா என எல்லோராலும் போற்றப்படும் எஸ்.பி.பி, கர்நாடக சங்கீதத்தை முறைப்படி கற்காதவர் என்றால் நம்ப முடிகிறதா? எனினும் கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாக கொண்டு 1979-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான சங்கராபரணம் படத்தில் அத்தனை பாடல்களையும் பாடி பிரமிக்க வைத்தார் எஸ்.பி.பி.

    சங்கராபரணம் படத்தில் பாடியதற்காக அவருக்கு முதல் தேசிய விருதும் கிடைத்தது. ஆனால் தேசிய விருது அறிவித்த பிறகுதான் எஸ்.பி.பி-க்கு கர்நாடக சங்கீதம் முறைப்படி தெரியாது என்ற விவரத்தை அறிந்து அதிர்ந்து போயிருக்கிறார்கள் தேர்வுக் குழுவினர்.

    https://youtu.be/JpGSPvWzHmc

    இயக்குநர் கே.பாலச்சந்தர் தான் இயக்கிய ஏக் துஜே கேலியே படத்தின் மூலம் எஸ்.பி.பி-யை இந்தியில் அறிமுகம் செய்தார். அப்போது எஸ்.பி.பி-க்கு இந்தி துளியும் தெரியாது. எனினும் அப்படத்தில் வரும் 'தேரே மேரே பீச் மெயின்' பாடலை உணர்வுப்பூர்வமாக பாடியதற்காக அவருக்கு இரண்டாவது தேசிய விருது கிடைத்தது.

    அதன்பின் தொடர்ந்து இந்தி பட வாய்ப்புகள் வந்தபோதுதான் எஸ்.பி.பி-க்கு இந்தி தெரியாது என்ற தகவலை அறிந்து ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள் இந்தி திரையுலகினர்.

    இதுவரை ஆறு முறை தேசிய விருதை வென்றுள்ள எஸ்.பி.பி, அதில் தமிழில் மின்சார கனவு படத்துக்காகவும் ஒருமுறை அவ்விருதை கைப்பற்றியுள்ளார். அப்படத்தில் அரவிந்த் சாமியின் தந்தையாக எஸ்.பி.பி-யே நடித்ததால் அரவிந்த் சாமியின் பாடலுக்கு அவரது குரல் பொருந்துமா என்ற கேள்வி எழுந்த போது தன்னுடைய வழக்கமான பாணியில் இருந்து சற்று வித்தியாசமான குரலில் அந்த பாடலை பாடி அசத்தினார் எஸ்.பி.பி. அதற்காக அவருக்கு ஆறாவது முறையாக தேசிய விருது கிடைத்தது.

    https://youtu.be/yHm8VhgO9p4

    மண்ணில் இந்த காதலின்றி பாடலுக்காக எஸ்.பி.பி-க்கு அந்த ஆண்டிற்கான தேசிய விருது கிடைக்கும் என்றே எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த விருதை பாடகர் எம்.ஜி.ஸ்ரீகுமார் ஒரு மலையாள பாடலுக்காக தட்டிச்சென்றார். எனினும் அந்த பாடலுக்காக எஸ்.பி.பி-க்கு தமிழக அரசின் சிறந்த பாடகருக்கான விருது கிடைத்தது.

    தனது அரை நூற்றாண்டுகால திரை வாழ்க்கையில் ஆறு தேசிய விருதுகள், 25 நந்தி விருதுகள், 4 தமிழக அரசு விருதுகள் என 50-க்கும் மேற்பட்ட விருதுகளை எஸ்.பி.பி வாங்கி குவித்துள்ளார். ஆனால் அதைவிட கோடிக்கணகான உள்ளங்களை வென்றிருக்கிறார். அதனால்தான் அவர் மீண்டு வர வேண்டும் என ஒட்டுமொத்த தமிழ்நாடும் பிரார்த்திக்கிறது.

     
    Published by:Vijay R
    First published:

    Tags: S.P.Balasubramaniyam

    அடுத்த செய்தி