Home /News /entertainment /

சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதை எஸ்.பி.பி பெயரில் வழங்கவேண்டும் - பிரபல தயாரிப்பாளர் கோரிக்கை..

சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதை எஸ்.பி.பி பெயரில் வழங்கவேண்டும் - பிரபல தயாரிப்பாளர் கோரிக்கை..

எஸ்.பி.பி | கேயார்

எஸ்.பி.பி | கேயார்

சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதை எஸ்.பி.பி பெயரில் வழங்க வேண்டும் என்று தயாரிப்பாளர் கேயார் கோரிக்கை வைத்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    தனது வசீகரக் குரலால் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 74. அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், முதலமைச்சர்கள், திரைத்துறையினர், விளையாட்டு பிரபலங்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் இரங்கல் தெரிவித்தனர்.

    இந்நிலையில் நேற்று எஸ்.பி.பி.யின் உடல் தமிழக காவல்துறையின் மரியாதையுடன் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் சர்வேஸ்வரா நகரில் இருக்கும் பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

    எஸ்.பி.பி.மறைவு குறித்து தயாரிப்பாளர் கேயார் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது, “எஸ்.பி.பி.யின் மறைவைக் கேள்விப்பட்டதிலிருந்து என்னால் இப்போது வரை வழக்கமான நபராக இருக்க முடியவில்லை. அந்தளவுக்கு அவருடைய மறைவு என்னை பாதித்துள்ளது. எஸ்.பி.பி.யின் மறைவு இந்திய திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.

    ஏனென்றால் கடந்த 50 ஆண்டுகளாக அவர் இசையுலகில் ஆற்றியிருக்கும் சாதனையை, வேறு யாரேனும் செய்ய முடியுமா எனத் தெரியவில்லை. 6 முறை தேசிய விருதுகள் வாங்கியுள்ளார். பத்மபூஷன் விருதையும் வென்றுள்ளார். இந்த பூலோகத்தில் இசை இருக்கும் வரை எஸ்பிபி அவர்கள் சாகாவரம் பெற்ற சிரஞ்சீவியாக இருப்பார்.



    எஸ்.பி.பி.யின் சாதனையைப் போற்றும் விதமாக சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினை எஸ்.பி.பி பெயரில் மத்திய அரசு வழங்க வேண்டும் என்பதே என் கோரிக்கை. அப்படி வழங்கினால் அவரது பெயர் காலத்துக்கும் நிலைத்து நிற்கும். இது என்னுடைய கருத்து மட்டுமல்ல, ஒட்டுமொத்த திரையுலகினரின் கருத்தும் கூட” இவ்வாறு தயாரிப்பாளர் கேயார் தெரிவித்துள்ளார்.
    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: S.P.Balasubramaniyam

    அடுத்த செய்தி