பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா தொற்று

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா தொற்று
எஸ்.பி.பாலசுப்ரமணியம்
  • Share this:
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் அரசியல்வாதிகள், திரையுலக பிரபலங்கள் என பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யாராய், இயக்குநர் ராஜமவுலி உள்ளிட்ட திரைத்துறை பிரபலங்கள் கொரோனா தொற்றுக்கு உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ பதிவிட்டிருக்கும் எஸ்.பி.பாலசுப்ரமணியம், “லேசான அறிகுறிகள் இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறேன். காய்ச்சல், சளி பிரச்னை குறைந்திருக்கிறது. வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தினர். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெறுவதே நல்லது என்பதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தன்னை நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி” என்றும் அவர் தனது வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.
First published: August 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading