கடந்த 5-ம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்ட எஸ்.பி.பி. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆரம்பத்தில் சிகிச்சைக்கு அவரது உடல் ஒத்துழைத்த நிலையில், கடந்த 14-ம் தேதி மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டது.
இதனால் தீவிர சிகிச்சை பிரிவிலும் பின்னர் தனி அறையிலும் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எக்மோ மற்றும் செயற்கை சுவாசக் கருவிகள் உதவியோடு அவருக்கு சிகிச்சை தொடர்வதாக மருத்துவமனை நிர்வாகம் செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது.
நுரையீரல் மட்டும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தாலும் மற்ற உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் நன்றாக உள்ளது. மேலும், மருத்துவர்களின் அறிவுரைக்கு ஏற்ப செயல்படும் வகையில் நினைவாற்றலும் அவருக்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
படிக்க:
மோசமடைகிறதா நிலைமை? - 10 மடங்கு வேகமாக தொற்றும் புதிய கொரோனா வைரஸ் வகையைக் கண்டறிந்தது மலேசியா..
படிக்க:
திடீரென ஏற்பட்ட மரணம் - கதறி அழுத ‘செம்பருத்தி’ சீரியல் நடிகை
எஸ்.பி.பி.யின் உடல்நிலையை மருத்துவ நிபுணர் குழு கூர்ந்து கண்காணித்து வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அறையில் ஸ்பீக்கர்கள் பொருத்தி, எஸ்.பி.பி. பாடிய சாய்பாபா பாடல்களை ஒலிக்க விட்டும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.