முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / WATCH - 'ஆர்ஆர்ஆர்' பட நாட்டு நாட்டு பாடலுக்கு டான்ஸ் ஆடி குதூகலித்த தென் கொரியர்கள் - வைரல் வீடியோ

WATCH - 'ஆர்ஆர்ஆர்' பட நாட்டு நாட்டு பாடலுக்கு டான்ஸ் ஆடி குதூகலித்த தென் கொரியர்கள் - வைரல் வீடியோ

ஆர்ஆர்ஆர் பாடலுக்கு டான்ஸ் ஆடி வைப் செய்யும்  தென் கொரியர்கள்

ஆர்ஆர்ஆர் பாடலுக்கு டான்ஸ் ஆடி வைப் செய்யும் தென் கொரியர்கள்

தென்கொரிய தூதரகத்தைச் சேர்ந்தவர்கள் நாட்டு நாட்டு பாடலுக்கு டான்ஸ் ஆடி டிரெண்ட் செய்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் வெளியாகி இந்திய அளவில் மிகப்பெரும் வெற்றியைப் பதிவு செய்தது. இந்த திரைப்படம் சுமார் ரூ. 1200 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளது. குறிப்பாக இந்தியாவை தாண்டி அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சீனா உள்ளிட்ட நாடுகளிலும் ஆர்.ஆர்.ஆர். படத்தைக் கொண்டாடினர்.

ஆஸ்கர் விருதுக்கு அடுத்ததாக கருதப்படும் கோல்டன் குளோப் விருது, இந்த படத்தில் இடம்பெற்ற நாட்டுக்கூத்து பாட்டிற்காக கிடைத்தது. இந்த விருதை படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி பெற்றுக் கொண்டார். ஹாலிவுட்டின் முன்னணி இயக்குநரான ஜேம்ஸ் கேமரூன் ஆர்.ஆர்.ஆர். படத்தை 2 முறை பார்த்து, ராஜமௌலியை நேரில் பாராட்டியுள்ளார். இந்நிலையில் ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் விருதுகளை குவித்து வருகிறது.

நாட்டுக்கூத்து பாடல் ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆஸ்கர் விருது அறிவிப்பு விழாவில் இந்த பாடல் விருதை தட்டிச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டு நாட்டு பாடல், மொழிகளையும்,நாடுகளையும் கடந்து அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

தென்கொரியர்கள் நாட்டு நாட்டு பாடலை டிரெண்ட் செய்து வரும் நிலையில் அவர்கள் ஆடிய நடனத்தின் காட்சிகளை இந்தியாவில் உள்ள கொரிய தூதரகம் வீடியோவாக வெளியிட்டுள்ளது. இசைக்குழுவை ரசித்த தென்கொரியர்களை ஆட்டம் போட வைத்துள்ள நாட்டு நாட்டு பாடல், அந்நாட்டில் தற்போது கவனத்தை ஈர்த்து வருகிறது.

First published: