முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / நடிகர் சங்க தேர்தல் முடிவு: விஷால் அணியா? ஐசரி கணேஷ் அணியா.. வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன

நடிகர் சங்க தேர்தல் முடிவு: விஷால் அணியா? ஐசரி கணேஷ் அணியா.. வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன

நடிகர் சங்கம் தேர்தல் முடிவு

நடிகர் சங்கம் தேர்தல் முடிவு

பாக்யராஜ் அணியில் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட ஐசரி கணேஷ் மீது தனி மனித தாக்குதலை தொடங்கினார், விஷால் தரப்பில் உள்ள கருணாஸ். இதனால் பொறுமை இழந்த பாக்யராஜ் அணியும் விஷால் பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் குற்றம் கண்டுபிடித்து புகார் சொல்ல தொடங்கியது.

மேலும் படிக்கவும் ...
  • 1-MIN READ
  • Last Updated :

2019-ம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலின் வாக்குகள் இன்று எண்ணப்பட உள்ள நிலையில் நடிகர் சங்க தேர்தல் கடந்து வந்த பாதையையும் மாறி மாறி இரு தரப்பினரும் குற்றம்சாட்டி கொண்ட கதையையும்  பார்க்கலாம்.

நடிகர் சங்கம் என்று ஒன்று உள்ளது என்ற செய்தி மக்களுக்கு விஜயகாந்த் நடிகர் சங்கத்தில் தலைவராக இருந்தபோது தெரியும் என்றால் நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடைபெறும் என மக்கள் தெரிந்து கொண்ட ஆண்டு 2015. அதுவரை நடிகர் சங்கத்தில் தலைவராக இருந்த சரத்குமாரும் செயலாளராக இருந்த ராதாரவியும் நடிகர் சங்க இடத்தில் வணிக வளாகம் கட்ட திட்டமிட்ட நிலையில் இதனை எதிர்த்து நடிகர் சங்க கட்டிடம் கட்ட வேண்டும் என்ற முழக்கத்துடன் நடிகர் விஷால் பாண்டவர் அணியை கட்டமைத்தார்.

2015ஆம் ஆண்டு நடிகர் சங்க தேர்தலில் ராதாரவிக்கு எதிராக விஷால் களமிறங்கிய போது வார்த்தை மோதல்கள் உச்சத்தை எட்டி இருந்தது. மாறி மாறி ஒருமையில் அழைப்பதும் அவ்வபோது நடந்தது. ராதாரவி தரப்பில் களமிறக்கப்பட்ட சிம்புவும் விஷாலை நரி என கூறி தேர்தல் சூட்டை அதிகப்படுத்தினார். ஏறத்தாழ ஒரு பொது தேர்தலுக்கு நிகராக இந்த தேர்தல் பார்க்கப்பட்டது.

வெறும் 3 ஆயிரம் வாக்குகளை மட்டுமே கொண்ட நடிகர் சங்க தேர்தல் தமிழக சினிமா களத்தில் முக்கிய கவனம் பெற 2015 தேர்தல் முக்கிய காரணமாக மாறியது. ஒரு கட்டத்தில் ராதிகா, விஷாலை சாதி ரீதியக அழைத்து சாதிய, மொழி சண்டைக்கு வித்திட சாதிய மற்றும் இனவாதம் நடிகர்களுக்கும் பிரதானப்பட்டது. எனினும் இந்த தேர்தலில் விஷால் அணி அனைத்து பதவிகளிலும் வெற்றி பெற்று நாசர் தலைமையில் விஷால் செயலாளராக பதவி ஏற்றது.

இதையும் படிங்க: நடிகர் சங்க தேர்தலில் யார் யார் எந்தெந்த பதவிக்கு போட்டி போட்டார்கள்? - முழு விவரம்!

இந்த செயற்குழு பதவிக்காலம் முடிந்து 2018 ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய தேர்தல் 2019 ஆம் ஆண்டு தாமதமாக அறிவிக்கப்பட்டது. செயற்குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிந்த பின்னர் நீதிபதியை நியமித்து தேர்தலை அறிவித்தது செல்லாது என்ற புகாரோடு புதிய தேர்தல் சூடுபிடிக்க தொடங்கியது. ஆனால் இந்த முறை தேர்தலில் ஆரம்பத்திலிருந்தே அதீத அமைதி கடைபிடிக்கப்பட்டது.

விஷாலுக்கு எதிராக புதிய அணியை கட்டமைத்த ஐசரி கணேஷ் உள்ளிட்டோர், நாங்கள் இன்னும் விரைவாக கட்டடம் கட்டுவோம் என்பதை தாண்டி வார்த்தையில் கடுமை காட்டுவதை தவிர்த்தே வந்தனர். இன்னும் ஒரு படி மேலே சென்ற பாக்யராஜ் நாங்கள் கட்டடம் கட்டி முடித்தால் முதல் மரியாதை நாசருக்கும் விஷாலுக்கும் என நட்பு பாராட்டினார்.

மேலும் படிங்க: கர்ப்ப காலத்தை ஆனந்தமாகக் கொண்டாடும் நடிகை ஆலியா மானசா!

ஆனால் இரு தரப்பும் கொஞ்சம் கொஞ்சமாக பொறுமை இழக்க தொடங்கினர். பாக்யராஜ் அணியில் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட ஐசரி கணேஷ் மீது தனி மனித தாக்குதலை தொடங்கினார், விஷால் தரப்பில் உள்ள கருணாஸ்.

இதனால் பொறுமை இழந்த பாக்யராஜ் அணியும் விஷால் பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் குற்றம் கண்டுபிடித்து புகார் சொல்ல தொடங்கியது.

வார்த்தைக்கு வார்த்தை நாங்கள் ஒரே குடும்பம் என பேசினாலும், பேசும் வார்த்தைகளின் கடுமை நாளுக்கு நாள் கூடியது. தேர்தல் நடைபெறுமா நடைபெறாத என்ற குழப்பத்திற்கு இடையே 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற்று முடிந்தாலும் நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்ட உறுப்பினர்களின் வாக்குரிமை புறக்கணிக்கப்பட்டது, பதவிக்காலம் முடிந்து தேர்தலை அறிவித்தது என பல்வேறு பிரச்சினைகள் அடுத்தடுத்து நீதிமன்றக் கதவுகளைத் தட்ட நடைபெற்று முடிந்த வாக்குப்பதிவின் முடிவுகள் பேங்க் லாக்கரில் பத்திரமாக பூட்டி வைக்கப்பட்டது. பூட்டி வைக்கப்பட்ட தேர்தல் முடிவுகள் இன்று எண்ணப்பட்டு விரைவில் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ள நிலையில் மீண்டும் விஷால் அணி வெற்றி பெறுமா அல்லது விஷால் அணிக்கு எதிராக களமிறங்கிய ஐசரி கணேஷ் அணி வெற்றி பெறுமா என்பதை விரைவில் தெரிந்து கொள்ளலாம்.

First published:

Tags: Election Result, Nadigar Sangam