ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

4 ஆண்டுகளுக்கு பிறகு.. தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுக்கும் நடிகை சித்தாரா!

4 ஆண்டுகளுக்கு பிறகு.. தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுக்கும் நடிகை சித்தாரா!

நடிகை சித்தாரா

நடிகை சித்தாரா

ஹிட் லிஸ்ட் படத்தில் ஹீரோவாக இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா நடிக்கிறார். இந்த படத்தை சூரிய கதிர் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் இணைந்து இயக்குகின்றனர்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    பிரபல தென்னிந்திய சினிமா நடிகை சித்தாரா, 4 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வந்துள்ளார்.

    தென்னிந்திய மொழிகளில் நூற்றுக்கும் அதிகமான படங்களில் நடிகை சித்தாரா நடித்து தென்னிந்தியா முழுவதும் அறியப்படும் நடிகையாக இருக்கிறார். இதனை தவிர்த்து தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் பத்துக்கும் அதிகமான மெகா சீரியல்களில் சித்தாரா நடித்துள்ளார்.

    1989 -இல் வெளியான புது புது அர்த்தங்கள் திரைப்படத்தின் மூலம் தமிழில் சித்தாரா அறிமுகமானார். இதன்பின்னர் உன்னைச் சொல்லிக் குற்றமில்லை, புது புது ராகங்கள், புது வசந்தம், புரியாத புதிர், ஒரு வீடு இரு வாசல் உள்ளிட்ட பல்வேறு படங்களில் சித்தாரா இடம் பெற்றிருந்தார்.

    'ஏற்றிவிட்ட ஏணியை மறக்கக் கூடாது..' நடிகை இந்துஜாவுக்கு பதிலடி கொடுத்த ஆர்கே சுரேஷ்

    2014 -இல் வெளியான விஷாலின் பூஜை திரைப்படத்தில் இடம்பெற்ற சித்தாரா, அதன் பின்னர் 2018 - இல் வெளியான நாகேஷ் திரையரங்கம் படத்தில் ஹீரோ ஆரி அர்ஜுனனுக்கு அம்மா கேரக்டரில் நடித்தார். இதன்பின்னர் எந்த தமிழ் சினிமாவிலும் நடிக்காத நிலையில், தற்போது புதிதாக உருவாக உள்ள ஹிட் லிஸ்ட் படத்தில் சித்தாரா நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    "32 வருஷம்.. சினிமா மட்டும்தான் எனக்கு உசுரு.." மாஸ் வீடியோ வெளியிட்ட விக்ரம்!

    ஹிட் லிஸ்ட் படத்தில் ஹீரோவாக இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா நடிக்கிறார். அவருடன் படத்தில் கே.எஸ். ரவிகுமார், சரத்குமார் முனிஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, கேஜிஎஃப் வில்லன் ராமச்சந்திரா, மைம் கோபி உள்ளிட்டோரும் படத்தில் இடம்பெற்றுள்ளனர். இந்த படத்தை சூரிய கதிர் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் இணைந்து இயக்குகின்றனர்.

    Published by:Musthak
    First published:

    Tags: Kollywood