Home /News /entertainment /

காலத்தால் அழியாத பாடல்கள்... தென்னிந்திய சினிமாவின் இசையரசி பி.சுசிலாவின் திரைப் பயணம்

காலத்தால் அழியாத பாடல்கள்... தென்னிந்திய சினிமாவின் இசையரசி பி.சுசிலாவின் திரைப் பயணம்

 துள்ளும் இளமையுடன் ஜெயலலிதா அறிமுகமாகும் “பருவம் எனது பாடல்”… “ஆடாமல் ஆடுகிறேன்”. “உன்னை நான் சந்தித்தேன்”, “நாணமோ இன்னும் நாணமோ” என பி. சுசீலா பாடிய நான்கு பாடல்களும் ஹிட் அடித்தன.

துள்ளும் இளமையுடன் ஜெயலலிதா அறிமுகமாகும் “பருவம் எனது பாடல்”… “ஆடாமல் ஆடுகிறேன்”. “உன்னை நான் சந்தித்தேன்”, “நாணமோ இன்னும் நாணமோ” என பி. சுசீலா பாடிய நான்கு பாடல்களும் ஹிட் அடித்தன.

துள்ளும் இளமையுடன் ஜெயலலிதா அறிமுகமாகும் “பருவம் எனது பாடல்”… “ஆடாமல் ஆடுகிறேன்”. “உன்னை நான் சந்தித்தேன்”, “நாணமோ இன்னும் நாணமோ” என பி. சுசீலா பாடிய நான்கு பாடல்களும் ஹிட் அடித்தன.

    60களிலும், 70களிலும் தென்னிந்தியாவின் பட்டி தொட்டிகளில் எல்லாம் ஒலித்த குயில் பி.சுசீலா. அவரைப்பற்றிய ஒரு தொகுப்பை பார்க்கலாம்.
     

    60-களிலும், 70களிலும் தென்னிந்தியாவின் பட்டி தொட்டிகளில் எல்லாம் இந்த குயிலின் குரலே ஒலித்தது. அந்த குயிலின் பெயர் பி.சுசீலா. தனது தேமதுரக் குரலால், 1960 களிலிருந்து இன்று வரை பல கோடி இதயங்களை தென்றலாய் வருடிக் கொண்டிருக்கிறது. டி.எம்.எஸ்சும் பி.சுசீலாவும், கதாபாத்திரங்களாகவே மாறி உருகி உருகி பாடிய பாசமலரின் "மலர்ந்தும் மலராத" பாடலுக்கு நிகராக இன்றளவும் ஒரு அண்ணன் தங்கை பாசத்தை சொல்லும் பாடல் வரவில்லை. அப்பாடலில் வரும் பி.சுசீலாவின் விசும்பல் கல்நெஞ்சையும் கரைக்கச் செய்யும்.



    தாலாட்டு, சோகம், விரகதாபம், காதல், வீரம், ஏக்கம், ஊடல், என பல ரசங்களில் பி.சுசீலாவினது குரல் தமிழ் சினிமாவில் ஒலித்து இசை ரசிகர்களை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தியது. "கண்கள் இரண்டும் என்று உம்மைக்கண்டு பேசுமோ"…. "கனிய கனிய மழலை பேசும் கண்மணி" "பாலிருக்கும் பழமிருக்கும்" "ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்" "நான் பேச நினைப்பதெல்லாம்"…"என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்" .. "காதல் சிறகை காற்றினில் விரித்து" என பல பாடல்களில் பி.சுசீலா இசை வான வீதியில் சிறகை விரித்து பறந்தார்.








    பி.சுசீலா பாடிய "சொன்னது நீதானா" ….."முத்தான முத்தல்லவோ"….., "என்ன நினைத்து என்னை அழைத்தாயோ". ’பார்த்த ஞாபகம் இல்லையோ’, ’உன்னை ஓன்று கேட்பேன்’, ’சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து’ போன்ற பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் ஒலித்ததுடன் பாரெங்கும் சுசீலாவின் புகழை ஓங்கி உரைத்தது.




    “ஆயிரத்தில் ஒருவன்”. படத்தின் அனைத்து பாடல்களும் பி.சுசீலாவின் குரலால் சூப்பர் ஹிட் பாடல்களாகின. துள்ளும் இளமையுடன் ஜெயலலிதா அறிமுகமாகும் “பருவம் எனது பாடல்”… “ஆடாமல் ஆடுகிறேன்”. “உன்னை நான் சந்தித்தேன்”, “நாணமோ இன்னும் நாணமோ” என பி. சுசீலா பாடிய நான்கு பாடல்களும் ஹிட் அடித்தன.



    எம்ஜிஆர் – சிவாஜி தலைமுறை என்றில்லாமல் ரஜினிகாந்த் நடிப்பில் வந்த ‘அடுத்த வாரிசு’ திரைப்படத்தில் ’பேசக்கூடாது’ என்ற பாடலையும்…. விஜய்காந்த்-சுகன்யா நடிப்பில் வெளியான ’சின்ன கவுண்டர்’ திரைப்படத்தில் வந்த ’முத்துமணி மாலை’ என்ற பாடலையும் .. ’கேளடி கண்மணி’ திரைப்படத்தில் ’கற்பூர பொம்மை ஒன்று’ என்ற பாடலையும் பாடி அடுத்த தலைமுறைக்கும் ஒலித்தது பி.சுசீலாவின் குரல்.







    தென்றலென தவழும் குரலை… இனிமை வற்றாத குரலை…. எப்போதும் வாஞ்சையுடன் தழுவிக் கொள்ளும் தமிழ் சினிமா உலகம்.
    Published by:Musthak
    First published:

    Tags: P Susheela

    அடுத்த செய்தி