தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் - தலைவர் பதவிக்கு நாசரை எதிர்த்து இயக்குநர் பாக்யராஜ் போட்டி

எதிர்த்தரப்பில் யார் போட்டி? என்ற கேள்வி எழுந்த நிலையில், நடிகர் மற்றும் இயக்குநர் பாக்யராஜ் தலைமையில் ஒரு அணி களமிறங்குகிறது

news18
Updated: June 7, 2019, 6:21 PM IST
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் - தலைவர் பதவிக்கு நாசரை எதிர்த்து இயக்குநர் பாக்யராஜ் போட்டி
நடிகர் மற்றும் இயக்குநர் பாக்யராஜ்
news18
Updated: June 7, 2019, 6:21 PM IST
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு நடிகர் நாசரை எதிர்த்து இயக்குநர் பாக்யராஜ் போட்டியிட உள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் 23-ம் தேதி, நடக்க இருக்கிறது. ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

எம்.ஜி.ஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. அன்றைய தினமே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

Actor Vishal | நடிகர் விஷால்
நடிகர் விஷால்


கடந்த தேர்தலில் வென்ற விஷால் அணி இம்முறையும் களமிறங்குகிறது. தலைவர் பதவிக்கு நாசர், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி, துணைத்தலைவர் பதவிகளுக்கு கருணாஸ் மற்றும் பூச்சி முருகன் போட்டியிடுகின்றனர்.

ஸ்ரீமன், ரமணா, பசுபதி, நந்தா, தினேஷ் உள்ளிட்ட ‘பாண்டவர் அணி’யைச் சார்ந்தவர்கள் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.

எதிர்த்தரப்பில் யார் போட்டி? என்ற கேள்வி எழுந்த நிலையில், நடிகர் மற்றும் இயக்குநர் பாக்யராஜ் தலைமையில் ஒரு அணி களமிறங்குகிறது. தலைவர் பதவிக்கு நாசரை எதிர்த்து பாக்யராஜ் களம் காண்கிறார்.

பாக்யராஜ் அணி


பொதுச்செயலாளர் பதவிக்கு விஷாலுக்கு எதிராக ஐசரி கணேஷ் போட்டியிடுகிறார். துணை தலைவர் பதவிக்கு நடிகர் உதயா மற்றும் குட்டி பத்மினி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

First published: June 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...